உணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள்.! என் தொகுதி மக்களுக்கு உணவு கூட வழங்காவிட்டால்.. நான் எதற்கு எம்.பி.!

By Thiraviaraj RMFirst Published Apr 10, 2020, 10:44 PM IST
Highlights

இதுபோன்ற உதவிகள் பட்டினி சாவில் இருந்து அந்த மக்களை காப்பாற்றும்.

T.Balamurukan

உணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 911 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து மத்திய அரசு நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

கரூரில் முதல்நாள் 160 பாக்கெட்டுகள்.4வதுநாள் 3280.கொரொனாவைவிட கொடியஅரசியல், காவல்,வருவாய்த்துறையை வைத்து பசித்தவயிறுகளில் அடித்து உணவுகொடுப்பதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்திய பிறகேஓய்ந்தது. உணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள்.இரக்கமற்ற அரசியலுக்கு இதுநேரமல்ல pic.twitter.com/trLMGymvRc

— Jothimani (@jothims)

 

இந்தச் சமயத்தில் தமிழக அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகள், முன்னணி நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள். சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பது, தினசரித் தொழிலாளர்களுக்குச் சமைப்பதற்குப் பொருட்கள் என வழங்கி வருகிறார்கள்.இதுபோன்ற உதவிகள் பட்டினி சாவில் இருந்து அந்த மக்களை காப்பாற்றும்.

இந்த நிலையில், இந்த மாதிரியான உணவை வழங்குவதில் கரூரில் இருந்த சிக்கல் தொடர்பாக எம்.பி. ஜோதிமணி காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்..,

"கரூரில் முதல் நாள் 160 பாக்கெட்டுகள். 4-வதுநாள் 3,280. கொரோனாவை விடக் கொடிய அரசியல். காவல், வருவாய்த்துறையை வைத்து பசித்த வயிறுகளில் அடித்து உணவு கொடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்திய பிறகே ஓய்ந்தது. உணவு கொடுங்கள் அல்லது கொடுக்க விடுங்கள். இரக்கமற்ற அரசியலுக்கு இது நேரமல்ல.அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அரசோடு நிற்கிறோம். இம்மாதிரியான கொடூரங்கள் அரசின் மீதான நல்லெண்ணத்தைக் குலைக்கும். மற்ற அமைப்புகள் தமிழ்நாடெங்கும் உணவு வழங்கும்போது கரூர் மக்கள் எதற்குப் பட்டினி கிடக்கவேண்டும்? ஒரு எம்.பி.யும், எம்எல்ஏவும் பசித்த வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால் இருந்து என்ன பயன்?".இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


 

click me!