வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை..!

By T BalamurukanFirst Published Sep 14, 2020, 10:56 PM IST
Highlights

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் ஒட்டுமொத்த இந்திய மக்கள் கண்களில் கண்ணீர் வடிந்ததோடு ஓர் அரசாங்கத்தையே மாற்றினார்கள் என்பதை மத்திய அரசு உணர்ந்து அதையெல்லாம் மனதில் கொண்டு தான் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
 
கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. அத்துடன் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழை காரணமாகவும் பயிர்கள் நாசமானதால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தியில் 28 சதவீதம், மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்காக உள்ளது குறி்ப்பிடத்தக்கது.இந்த தடை உத்தரவையடுத்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
click me!