காஷ்மீர் பிரச்சனைக்கு சீனாவை கூப்பிட்ட பரூக்அப்துல்லா.. ஒத்து ஊதும் சோனியா ஜி, ராகுல் ஜியை பங்கம்செய்த அமித்ஷா

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2020, 2:15 PM IST
Highlights

அது இந்தியாவின் மூவர்ணக் கொடியை அவமதிக்கிறது,  காங்கிரஸும் குப்கர் கூட்டணியுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதம் மற்றும் கலவரப் பகுதியாக மாற்ற விரும்புகிறது என்பது தெளிவாகி தெரிகிறது.

குப்கர் கூட்டணியில் கருத்துக்களையும் அதன் செயல்பாடுகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா என்பதை நாட்டு மக்களுக்கு சோனியா ஜி மற்றும் ராகுல் ஜி தெளிவுபடுத்த வேண்டும் என அமித்ஷா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக குப்கர்  என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது,  அந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீரின் 7 முக்கிய அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. 

அந்தக் கூட்டணி,  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் எனவும், அதை திரும்பப் பெறும் வரை இந்திய நாட்டின் மூவர்ணக் கொடி காஷ்மீரில் ஏற்றப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து மீண்டும் அமல்படுத்த தங்களுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுக்கும் என நம்புவதாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். எனவே இந்த கூட்டணியில் இந்நடவடிக்கை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் காலியாக உள்ள பதவிகளுக்கு குப்கர் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிடப்போவதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. அங்கு தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என காஷ்மீர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குக்கர் கூட்டணியின் விதிப்படி பருக் அப்துல்லா வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுவார் எனவும் குப்கர் கூட்டணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.ஒய் தரிகாமி உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். இக்கூட்டணியில் பரூக்  அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மெகபூபா முப்தியின்  மக்கள் ஜனநாயக கட்சி உட்பட 7 கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணி ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்காகவும், அவர்களை பாதுகாப்புக்காகவும் உருவாக்கப்பட்டது எனவும் குப்கர் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குப்கர் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்திருக்கிறது. இதுகுறித்து பாஜக சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், குப்கர் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால் அவர்களிடம் எங்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன. காங்கிரஸ் எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் நாங்கள் அதை கேள்வி கேட்கவில்லை, ஆனால் அவர்களின் நோக்கத்தினை கேள்வி கேட்கலாம் என்றார். 

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப அமல்படுத்த சீன ஆதரவளிக்கும் என்று பரூக் அப்துல்லா நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், 370 திரும்பக் கொண்டு வரும் வரை ஜம்மு காஷ்மீரில் மூவர்ண கொடி பறக்காது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார், இதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந் நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸுக்கு சரமாரியாக கேள்விகளை முன்வைத்து டுவிட் செய்துள்ளார். அதாவது,  குப்கர் கூட்டணியின் கொள்கைகளுக்கு காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அந்தக் கூட்டணியின் செயல்பாடுகளை சோனியா ஜி மற்றும் ராகுல் காந்தி ஜி ஆதரிக்கிறீர்களா என்பதை நீங்கள் இந்திய மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குப்கர் கூட்டணி என்பதே ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிட வேண்டுமென விரும்புகிற கூட்டணி, அது இந்தியாவின் மூவர்ணக் கொடியை அவமதிக்கிறது,  காங்கிரஸும் குப்கர் கூட்டணியுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதம் மற்றும் கலவரப் பகுதியாக மாற்ற விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. 

370-வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் நாங்கள் (பாஜக) அங்குள்ள தலித்துகள், பெண்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்துள்ளோம், ஆனால் அதை காங்கிரஸ், குப்கர் கூட்டணி பறிக்க விரும்புகிறது. இதனால்தான் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. நமது தேசிய நலனுக்கு எதிரான இது போன்ற செயல்பாடுகளை, இந்திய மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். குப்கர் கூட்டணி தேசிய நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் இல்லையென்றால் மக்கள் அதை புறக்கணிப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
 

click me!