விவசாயிகள் போராட்டம்... டார்க்கெட் செய்யப்படும் பிரபல நடிகை..!

By Thiraviaraj RMFirst Published Feb 12, 2021, 3:52 PM IST
Highlights

இந்தி நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. அந்த ட்விட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
 

இந்தி நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. அந்த ட்விட்களை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

கங்கனா ரனாவத் தற்போது மத்திய பிரதேசத்தில் பெத்துல மாவட்டத்தின் சர்னி பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளார். கங்கனா தனது சர்ச்சைக்குரிய டுவிட்டுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது படப்பிடிப்பை தடுத்து நிறுத்துவோம் என்று அந்த மாநில காங்கிரஸ் எச்சரிக்கை செய்துள்ளது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் இதை அறிவித்தார். கங்கனா ரனாவத்தின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அந்த படப்பிடிப்புக்கு மாநில உள்துறை அமைச்சர் பாதுகாப்பு தருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், ‘மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தனது கட்சி தொண்டர்கள் படப்பிடிப்புக்கு இடையூறு விளைவிப்பதைக் தடுக்க வேண்டும். நான் பெத்துல் காவல்துறை கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசினேன். சட்டம் தனது நடவடிக்கையை எடுக்கும், கடைப்பிடிக்கும். நான் சகோதரி மகள் கங்கனாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அவர் எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளமாட்டாள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!