40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம். விவசாயிகள் சங்க தலைவர் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2021, 12:27 PM IST
Highlights

புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 4 லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.  

புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 4 லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மத்திய அரசை எச்சரித்துள்ளார். விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அவர் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக மத்திய அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மத்திய டெல்லியில் நுழைந்து செங்கோட்டையில் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டனர்.

இது சர்வதேச அளவில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதில்  தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி எல்லையில்  முற்றுகை போராட்டத்தை விவசாயிகள்  தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் யுனைட்டட் கிஷான்  மோர்ச்சா வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விவசாய சங்கங்களின்  தலைவர் ராகேஷ் திகைத், இந்த முறை மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நாங்கள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.  இந்த முறை 4 லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் இந்தியா கேட் அருகே உள்ள பூங்காக்களை உழுது அதில் விவசாயப் செய்வார்கள் எனவும் எச்சரித்தார். 

 

ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கான தேதியை தீர்மானிப்பார்கள்,  விவசாயிகள் எந்தநேரத்திலும் போராட்டத்திற்கு  தயாராக இருக்க வேண்டும், ட்ராக்டர் அணிவகுப்பின் போது தேசிய தலைநகரில் வன்முறை உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் விவசாயிகள் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் சதித்திட்டம் தீட்டப்பட்டது எனவும் அவர் மத்திய அரசை குற்றம் சாட்டினார். நாட்டின் விவசாயிகள் மூவர்ணத்தை விரும்புகிறார்கள், ஆனால் இந்த நாட்டின் தலைவர்கள் அப்படி அல்ல என்று அவர் விமர்சித்தார். சர்ச்சைக்குரிய அந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், அடிப்படை ஆதார விலையை  நடைமுறைப்படுத்தாவிட்டால், விவசாயிகள் பெரிய நிறுவனங்களின் கோடோன்களை இடித்து தரைமட்டமாக்குவார்கள் என அவர் எச்சரித்தார். இக்கூட்டத்தில் ஸ்வராஜ் இயக்கத் தலைவர் யோகேந்திர யாதவ், அகில இந்திய தேசிய துணைத் தலைவர் கிசான் சபா அம்ரா ராம், கிசான் யூனியனின் தேசிய பொதுச் செயலாளர் சவுத்ரி யுத்வீர் சிங் மற்றும் பலர் உரையாற்றினர்.
 

click me!