ஒரு விவசாயி ஆட்சி செய்தால் அது இந்த ஸ்டாலினுக்கு பிடிக்காது !! கொந்தளித்த எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Jul 29, 2019, 9:58 AM IST
Highlights

தமிழகத்தை ஒரு விவசாயி ஆட்சி செய்வதைப் பொறுக்க முடியாமல் அதை எப்படியாவது கவிழ்த்துவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அனால் அது ஒருக்காலும் நடக்காது என வேலூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
 

வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கேவி குப்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர். நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை, முதல்வர் நாற்காலி மீது முக ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான், உதயநிதிக்கு சட்டப்பேரவையிலேயே புகழ்பாடுகிறார்கள் என தெரிவித்தார்..  

கர்நாடகாவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் முக ஸ்டாலின். வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள்? திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. 

அதிமுகவை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இங்கு பெரும்பான்மை ஆட்சி நடைபெற்று வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது. ஒரு விவசாயியாக மக்கள் முன் நிற்பது எனக்கு பெருமை. என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை ஒரு விவசாயி ஆட்சி செய்வதைப் பொறுக்க முடியாமல் அதை எப்படியாவது கவிழ்த்துவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். 

ஆனால் அது ஒருக்காலும் நடக்காது என வேலூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

வேலூர் தேர்தலை நிறுத்த நாங்கள் முயற்சிக்கவில்லை. வேலூரில் திமுகவினர் பதுக்கி வைத்திருந்த பணம் பிடிப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க திமுக தான் காரணம். சிறுபான்மையின மக்களின் குரல் மேலவையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பதவி கொடுத்துள்ளோம்.  என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

click me!