பணக்காரனா பார்த்து கட்சிப் பொறுப்பு தருவியா தலைவா!? விளைவு வேற மாதிரி இருக்கும்...? ரஜினிக்கு எச்சரிக்கை விடுக்கும் ரசிகர்கள்....

By sathish kFirst Published Sep 21, 2018, 11:30 AM IST
Highlights

’இன்னைக்கு பணக்காரனா பார்த்து கட்சிப் பொறுப்பை கொடுக்கிற தலைவர், பணக்காரன் மட்டும் என் ரசிகனா இருங்கடான்னு அப்போவே அறிவிச்சிருக்கலாமே!?’ என்று சூப்பர் ஸ்டாரை நோக்கி சுளீர் என கேட்கிறார்கள் அவரது மக்கள் மன்றத்தினர் கம் ரசிகர்கள். 

’இன்னைக்கு பணக்காரனா பார்த்து கட்சிப் பொறுப்பை கொடுக்கிற தலைவர், பணக்காரன் மட்டும் என் ரசிகனா இருங்கடான்னு அப்போவே அறிவிச்சிருக்கலாமே!?’ என்று சூப்பர் ஸ்டாரை நோக்கி சுளீர் என கேட்கிறார்கள் அவரது மக்கள் மன்றத்தினர் கம் ரசிகர்கள்.  

’இன்னைக்கு பணக்காரனா பார்த்து கட்சிப் பொறுப்பை கொடுக்கிற தலைவர், பணக்காரன் மட்டும் என் ரசிகனா இருங்கடான்னு அப்போவே அறிவிச்சிருக்கலாமே!?’ என்று சூப்பர் ஸ்டாரை நோக்கி சுளீர் என கேட்கிறார்கள் அவரது மக்கள் மன்றத்தினர் கம் ரசிகர்கள். 

கட்சியாக உருவெடுப்பதற்கான அடிப்படை வேலையாக மக்கள் மன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது ரஜினியின் ரசிகர் மன்றம். இவற்றின் நிர்வாகிகளாக ரசிகர் மன்ற நிர்வாகிகளே பெரும்பாலும் இருந்தனர். அவர்கள் பலர் ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர குடும்பத்தினர். 

இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் இந்த நபர்கள் மாற்றப்பட்டு, புதிய நபர்கள் அமர்த்தப்பட்டுக் கொண்டு வருகிறார்களாம். இந்த புதிய நபர்களை கவனித்துப் பார்த்தால் ஒன்று புரிகிறது, அது அவர்கள் வசதியுள்ள பார்ட்டிகள் என்று. இப்படி ஏதோ ஒரு இடம், இரண்டு இடமென்றாலும் கூட யதேச்சையாக நடந்தது போல! என்று ரசிகர்கள் கடந்து போயிருப்பார்கள். ஆனால் தொடர்ந்து இப்படி நடப்பதாக தகவல். 

சமீபத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி நடந்திருக்கிறது. அங்கே ரஜினி மன்ற பொறுப்பாளர்களாக இருந்த கோவிந்தராஜ், ரஜினி பாஸ்கர், வீரமணி ஆகியோர் தூக்கியெறியப்பட்டு புதிய பொறுப்பாளர்களாக கலியராஜ் உள்ளிட்ட சிலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் கலியராஜ் செம்ம கோடீஸ்வரர். 

இதுதான் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சூடேற்றிவிட்டது. இது பற்றி கொதிப்பாய் பேசும் அவர்கள் “மக்கள் மன்றம் துவக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்ததும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மரியாதை கிடைத்தது. உற்சாகமானோம். ஆனால் சில மாதங்களிலேயே சாதாரண அரசியல்வாதி போல் வேலையை காட்ட துவங்கிவிட்டாரே தலைவர்?

கோடீஸ்வரர்களை தான் பொறுப்பில் அமர்த்துகிறார். கேட்டால், பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை, அடிப்படையான வேலைகளை கூட பண்ணவில்லை என்கிறார்கள். இது முழு பொய். ரசிகர் மன்ற தலைவராக இருந்து, மக்கள் மன்ற தலைவரானவர்கள் ஏழைகள்தான். ஆனாலும் வட்டிக்கு பணம் வாங்கி கூட பல லட்சங்கள் செலவு செய்து பூத் கமிட்டியெல்லாம் அமைத்துவிட்டார்கள் கணிசமாக. ஆனால் இப்போது பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டால் இனி என்ன செய்ய முடியும்? பொறுப்பில்லையென்றால் நாளை எப்படி சீட் கிடைக்கும்? எப்படி வளர முடியும்?

இதில் கொடுமை என்னவென்றால் பழைய ஏழை நிர்வாகிகளின் பதவியை தலைமையே பறிக்காமல், நிர்வாகிகள் அவர்களே ராஜினாமா செய்வது போல் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி பிரஷர் கொடுத்து வெளியேற்றிவிட்டார்கள். இதெல்லாம் ஜெயலலிதா போல் சர்வாதிகாரம். அந்தம்மாவாவது சில முறை சி.எம்.மாக இருந்தபோது இப்படி பண்ணாங்க. ஆனா இவரு கட்சியே துவங்கல. அதுக்குள்ளே இப்படி சர்வாதிகாரம் காட்டுறாரே ரஜினி.

இப்பவும் அவரை நாங்க தலைவரா, சூப்பர் ஸ்டாரா ஏன் கடவுளா கூட நினைக்கிறோம். ஆனால் அடிப்படை நன்றியே இல்லாம நடந்துக்குறார். தான்  துவங்கும் கட்சிக்கு வசதியான நிர்வாகிகள்தான் வேணும்னு நினைக்கிறார். அப்போ ஏழை ரசிகர்கள் எதுக்கு கோஷம் போடவும், போஸ்டர் ஒட்டவும், ஓட்டுப் போடவும் மட்டும் தானா? 

அன்னைக்கு அவரோட சினிமா ரசிகனா இருந்தப்பவும் போஸ்டர் ஒட்டினோம், இனி அவர் அரசியல் தலைவரான பிறகு அவரோட தொண்டனா இருந்தும் போஸ்டர் ஒட்டணும் இல்லையா! அப்போ நாங்க வளரவே கூடாதா?

கட்சி பதவியில் ஏழைகள் வேண்டாம்னா அன்னைக்கு அவரோட சினிமாவை மாய்ஞ்சு மாய்ஞ்சு நாங்க பார்த்து ஓட வெச்சப்பவே “ஏழை ரசிகர்கள் எனக்கு வேண்டாம். பணக்காரர்கள் மட்டும் என் படத்தைப் பாருங்க’ன்னு சொல்லியிருக்கலாமே! அப்படி சொல்லியிருந்தால் ரஜினி பட டப்பா டான்ஸ் ஆடியிருக்குமே. வெறி விசுவாசிகளை ஓரங்கட்டிவிட்டு தப்பு பண்றார் தலைவர், இதன் விளைவு வேற மாதிரி இருக்கப்போவுது.” என்று முடித்தார்கள். 

இதற்கு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகம் என்ன சொல்கிறதென்றால்...”ஏழை ரசிகனை, ஏழை நிர்வாகியை தலைவர் ஒதுக்குகிறார்! என்பது கேவலமான குற்றச்சாட்டு. பல வருடங்களாக ஒருவர் ரசிகர் மன்றத்தில் இருப்பதாலேயே அவர் மக்கள் மன்ற நிர்வாகியாக இருக்கவேண்டும் என்று அவசியமுமில்லை, அதுவே அவரது தகுதியும் ஆகிவிடாது. 

நாங்கள் நன்றாக செயல்படும் நபர்களை நிர்வாகிகளாக்குகிறோமே தவிர அவரிடம் பணமிருக்கிறதா என்று பார்த்துவிட்டு பதவி தரவில்லை. 

தலைவர் போல் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் மட்டுமே வெற்றியடைய முடியும்.” என்கிறார்கள். ‘
சர்தான்!

click me!