கோபாலபுரத்தில் சந்திக்கும் அழகிரி, ஸ்டாலின்... குடும்ப பஞ்சாயத்தில் டீல் பேசி முடிக்கும் செல்வி, கனிமொழி!

 
Published : Jul 27, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
கோபாலபுரத்தில் சந்திக்கும் அழகிரி, ஸ்டாலின்...  குடும்ப பஞ்சாயத்தில் டீல் பேசி முடிக்கும்  செல்வி, கனிமொழி!

சுருக்கம்

family member will be announce karunanidhis health condition

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவிரி மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டிலேயே மருத்துவமனைகள்  இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

கருணாநிதியின் உடல் நிலை மிக சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாகவும், காய்ச்சலுக்கான மருந்தை அவரது உடல் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக தொண்டர்க்ள மிகுந்த  சோகத்துடள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை  சென்னையிலிருந்து  டெல்லி சென்ற கனிமொழி, பாஜக-காங்கிரஸ்  தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இன்று காலையில் டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்துட்டார். அதேபோல, மதுரையிலிருந்து அழகிரியும் சென்னைக்கு  வந்துவிட்டார்.

ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களும் தனித்தனியாக விவாதித்து முடித்திருக்கிறார்கள். தற்போது கோபாலபுரத்தில் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து விவாதிக்கவிருக்கிறார்கள். குடும்பத்தினர் ஒன்று கூடி பேசுகையில் அழகிரியை திமுகவில் சேர்ப்பது பற்றியும் சொத்துக்கள் குறித்தும்  பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பலவருடங்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கும் அண்ணன் தம்பிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கியது கருணாநிதியின் மகள்கள் செல்வியும், கனிமொழியும் தான் என சொல்கிறார்கள். இவர்களே கட்சி மற்றும் குடும்ப விவகாரங்களுக்கு டீல் பேசி முடிக்கிறார்களாம்.

இந்த பஞ்சாயத்தில் கட்சியின் பொருளாளர் பதவியும், தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் எதிர்பார்க்கிறார் அழகிரி ஏற்கனவே கட்சிக்கு அழகிரியும், ஆட்சி அமையும் போது ஆட்சிக்கு ஸ்டாலினும் என்கிற பேச்சு  எழுந்த நிலையில்,  இதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. தற்போதும்,  இதை மறுத்து வருகிறார் ஸ்டாலின்.  இன்று நடக்கவிருக்கும் இந்தக் குடும்பப் பஞ்சாயத்தில்  ஒரு முடிவு  எடுக்கப்பட்ட பிறகே , கருணாநிதி உடல்நிலை குறித்த முடிவை அறிவிக்கவிருக்கிறார்கள் என சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!