திருமாவளவனுக்கு எதிராக பொய் பிரச்சாரம்..?? பதிலடி கொடுக்க களத்தில் இறங்கிய சிறுத்தைகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2020, 2:11 PM IST
Highlights

 "அவதூறு பரப்புவோர் முகத்திரையை  கிழிப்போம்"  "ஆயிரம் தலைமுறை இழிவை துடைப்போம் எனக்கூறி மனுதர்ம நூலிலிருந்து சில அத்தியாயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

.

#பெண்ணுரிமை போராளிதிருமா ,#RejectManu என்ற இரண்டு ஹேஸ்டேக்குகள் இன்று  காலையிலிருந்து தமிழகத்தில் முதல் இரண்டு இடத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது எனவும்,  திருமாவளவனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  

காலம் காலமாக பெண்களை இழிவு செய்யும் மனு தர்மம் என்னும் சனாதான நூலைத் தடை செய்ய வலியுறுத்தி 24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் தமிழ் நாடெங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  "அவதூறு பரப்புவோர் முகத்திரையை  கிழிப்போம்" "ஆயிரம் தலைமுறை இழிவை துடைப்போம் எனக்கூறி மனுதர்ம நூலிலிருந்து சில அத்தியாயங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதாவது,   "ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால் சலன புத்தியால் இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால், கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர் என மனு தர்மம் 9.15 கூறுகிறது என்றும்,

 கணவன் சூதாடுகிறவனாயினும், பிணியாளனாகியும், மனைவி அவனுக்கு செருக்குற்று பணி புரியாமல் இருந்தால் அவளுக்கு அழகு செய்தல், படுக்கை, ஆடை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும் மனு ஸ்மிருதி அத்தியாயம் 9.78 கூறுகிறது,

அதேபோல் மனுஸ்மிருதி  9.14 இல் பெண்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை, வயதை பற்றியும் அக்கறை கொள்வதில்லை, ஆணாக இருந்தால் போதும், அழகாக இருப்பினும்  அவர்கள் அசிங்கமாக இருப்பினும் உறவுகொள்ள தயாராக இருப்பர் என்றும்,   

அதேபோல் ஆண்கள் புலன்களை அடக்கியவனாயினும், அறிவிலியாயினும் அவர்களை தங்களது தொடர்பால் காமம், குரோதம் உள்ளவனாக செய்வர் மாதர், என மனுஸ்மிருதி அத்தியாயம்-2 : 214 கூறுகிறது என மனு ஸ்மிருதி பெண்களை இழிவு செய்துள்ள கூற்றுகளை திருமாவளவன் பதிவு செய்துள்ளார்.

இந்து மத தர்மமான மனு ஸ்மிருதி  பெண்களை எவ்வாறெல்லாம் இழிவு செய்துள்ளது என்பதை தோளுரிக்கும் வகையில் திருமாவளவன் அதை பதிவிட்டுள்ளார். எனவே ஒட்டு மொத்த சனாதன நூலையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில்   மனு ஸ்மிருதி பெண்களை எவ்வாறெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை மேற்கோள்காட்டி திருமாவளவன் வெளியிட்ட வீடியோவை, ஒரு சிலர் எடிட் செய்து அவர் பெண்களுக்கு எதிராக அதாவது ஒட்டுமொத்த இந்து பெண்களும் விபச்சாரிகள் என்று கூறுகிறார் பாருங்கள் என்று  வீடியோ வெளியிட்டு அதனை திருமாவளவனுக்கு எதிராக ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் திருமாவளவன் மனு ஸ்மிருதியை தோளுரித்த முழு வீடியோவையும் வெளியிட்டு #பெண்ணுரிமைப்போராளிதிருமா,  #RejectManu என்ற ஹேஸ்டேக்  இன்று காலையில் இருந்து ட்ரெண்டாகி வருகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு  மாநில செயலாளர் சஜன் பராஜ் விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் உடனடியாக டுவிட்டரில் களத்தில் இறக்கவும், பெண் உரிமை பாதுகாவலர் திருமாவளவன் கருத்தியலை இந்திய அளவில் ட்ரண்ட் செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிறுத்தைகள் அனைவரும் உடனடியாக ட்விட்டரில் களமிறங்குவோம்... பெண் உரிமை பாதுகாவலர் திருமாவளவன் கருத்தியலை இந்திய அளவில் ட்ரண்ட் செய்வோம். எனஅழைப்புவிடுத்துள்ளார்.

 

Twitter Trending #பெண்ணுரிமை போராளிதிருமா  #RejectManu தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை இழிவுப்படுத்தும் விதத்தில் சங்கிகள் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்ட வீடியோவை வைத்து நேற்று (Paid trending) டிரெண்ட் செய்தார்கள்... இன்று #பெண்ணுரிமைபோராளிதிருமா #RejectManu என்னும் டேக் இயல்பாக டிரெண்ட் (Organic Trending) ஆகிறது...விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் டிவிட்டரில் மேற்கண்ட டேக்குகளை இன்று முழுவதும் தொடர்ந்து பதிவிடுவோம்! இந்தியளவில் தலைவரின் கருத்தியலை எடுத்துச்செல்வோம்! சனாதனத்தை வேரறுப்போம்! என அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் இந்துத்துவ வாதிகளுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்குமான கருத்தியல் மோதல் சமராக மாறியுள்ளது. 
 

click me!