உலகுக்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி... எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..!

Published : Dec 23, 2020, 11:50 AM IST
உலகுக்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி... எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..!

சுருக்கம்

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் 28வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தலைநகரில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று தேசிய விவசாய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  

ஆண்டுதோறும் டிசம்பர் 23ஆம் தினத்தை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுகிறார்கள். நன்றி கூறுகிறார்கள். அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு விவசாயம் வளர்ந்தால்தான் தேசம் மலரும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஆகவே நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்ற வேண்டும் அவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் 28வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தலைநகரில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று தேசிய விவசாய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் தலையாய தொழிலாக உழவுத் தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தேசிய விவசாய தின நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகிற்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில்  கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!