வீடுகட்டும் பெண்ணிடம் 10 லட்சம் மாமூல்.? வேலையை ஆரம்பித்த திமுக கவுன்சிலர்.. ADMK வெளியிட்ட பரபரப்பு வீடியோ.

Published : Mar 30, 2022, 04:59 PM ISTUpdated : Mar 30, 2022, 05:08 PM IST
வீடுகட்டும் பெண்ணிடம் 10 லட்சம் மாமூல்.? வேலையை ஆரம்பித்த திமுக கவுன்சிலர்.. ADMK வெளியிட்ட பரபரப்பு வீடியோ.

சுருக்கம்

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார். இந்நிலையில் கவுன்சிலராக வெற்றி பெற்று வந்துள்ள ஷர்மிளா காந்தி தனது கணவரை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ அதை ஆதாரமாக காட்டியுள்ளது.  கணவருடன் இணைந்து கட்டிடம் கட்டுபவர்கள் அழைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

வீடு கட்டும் பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு சென்னை 34 வது வார்டு  திமுக கவுன்சிலர் சர்மிளா மற்றும் அவரது கணவர் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அதிமுக தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு  வந்தது முதல் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி மேயர்கள் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதற்கு சாட்சி.

இதேநேர்த்தில் அதிமுக ஆட்சியில் நடத்தப்படாமல் கிடப்பில் கிடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தி உள்ளாட்சி  பிரதிநிதிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் சாலை, குடிநீர், மின் விளக்கு என அடிப்படைத் தேவைகள் மக்களுக்கு சீராக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. ஆனால் மறுபுறம் உள்ளாட்சி பதவிகளில் வந்து அமர்ந்துள்ள கவுன்சிலர்கள் மக்களை மிரட்டி, மாமூல் வசூலிக்கும் கலாச்சாரம் மேலோங்குமே என்ற  அச்சமும் இருந்துவருகிறது. வீடு  கட்டினால் மாமுல், தண்ணீர் கனக்ஷன் எடுத்தால் மாமுல் என எதற்கெடுத்தாலும் மாமூல் கொடுத்தாக வேண்டும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அதிமுக தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண் வீடுகட்டி வருவதாகவும் அதற்காக அவரிடம் 34வது வார்டு திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி அவரது கணவர் அதிமுக வட்டச்செயலாளர் கருணா ஆகியோர் 10 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு  மிரட்டுவதும் அதில் இடம்பெற்றுள்ளது. யார் வீடு கட்டினாலும் கவுன்சிலர்களுக்கு கட்டிங் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டும் பெண்ணை அழைத்து கவுன்சிலர் ஷர்மிளா அவரது கணவர் கருணா ஆகியோர் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்யும்  காட்சி இடம்பெற்றுள்ளது. கவுன்சிலரின் கணவர் கருணா என்ற கருணாநிதி மாநகராட்சி ஒப்பந்ததாரராகவும் சென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக உள்ளதாகவும், இவர் அடியாட்களுடன் பொதுமக்களை மிரட்டி வீடு கட்டுபவர்களிடம் மாமன் வசித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதற்கு ஆதாரமாக வெளியாகி உள்ள இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தவீடியோவில் இடம்பெற்றுள்ளதாவது:-  ஒரு பெண்ணிடம் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மற்றும் அடியாட்கள் சேர்ந்து என்னம்மா எவ்வளவு சொல்லியும் நீங்க கட்டுறீங்க.? நான் உங்ககிட்ட எவ்வளவு நேரம் பேசினேன். அதையும் மீறி கட்றீங்கன்னா என்ன அர்த்தம்? உங்கள் இடம் தானே,  நீங்க ஃபுல்லா காட்டுங்க தப்பே இல்ல என்கிறார். அதற்கு அந்த பெண்,

 சார்.. எங்க இடத்தில் நாங்க கட்றோம், எங்கே இருந்து வந்து நீங்கள் கவுன்சிலர் ஆகிட்டு எங்களை மிரட்டுகிறீர்களா? என்று அந்த பெண் கேட்க, அந்தப் பெண் வீடியோ எடுப்பதை தெரிந்துகொண்ட கவுன்சிலரின் கணவர் கருணா, அம்மா தயவுசெய்து நீங்க போங்க அம்மா என்று கூறுவதுடன், அந்த பெண்ணை எதிர்க்கும் அடியாட்களை மிரட்டி அமைதிப்படுத்துகிறார். ஆனால் அவரின் அருகில் இருந்த அடியாட்கள் அந்தப் பெண்ணை நீ கட்டிப்பார் என்ன செய்கிறோம் என்று பார் என்று மிரட்டுகிறார்கள்.  அதற்கு அந்தப் பெண் நான் முதல்வர் வரை செல்வேன், என்ன மிரட்டுகிறீர்களா.?  மேடம் நீங்க தான் கவுன்சிலர், நீங்க பேசுங்க உங்க கணவர் எதற்கு மிரட்டுகிறார். நீங்கள் செய்வதெல்லாம் தவறு. கவுன்சிலராக வந்தால் நாலு பேருக்கு நல்லது பண்ணுவீங்க என்று எதிர்பார்த்தோம், ஆனால் நீங்கள் இப்படி பண்றீங்களே என்ற அந்தப் பெண் ஆதங்கம் தெரிவிக்கிறார். இவ்வாறு அந்த வீடியோ அமைந்துள்ளது. 

அந்த வீடியோ காண்க...

 

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார். இந்நிலையில் கவுன்சிலராக வெற்றி பெற்று வந்துள்ள ஷர்மிளா காந்தி தனது கணவரை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோ அதை ஆதாரமாக காட்டியுள்ளது.  கணவருடன் இணைந்து கட்டிடம் கட்டுபவர்கள் அழைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. கட்டிட விதிமீறல் இருந்தால் சட்டப்படி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், பெண் கவுன்சிலர் கணவருடன் சேர்ந்து மிரட்டி பணம் கேட்கும் அவசியம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக திமுகவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால், இது திமுக தலைமைக்கும், திமுகவுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை முதல்வர் ஸ்டாலின் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!