அதிமுக கோட்டையில் வேட்டை.. இனிமேல் கொங்குமண்டலத்தில் நாங்கதான் கிங்கு.. காலரை தூக்கி விடும் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Apr 30, 2021, 5:32 PM IST
Highlights

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்குமண்டலத்தில்  திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஏ.பி.பி - சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்குமண்டலத்தில்  திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஏ.பி.பி - சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அன்று மாலையே வெளியாகும். இம்முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால், அந்தத் தேர்தல் முடிந்த பின்னரே கருத்துக்கணிப்பு வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் நேற்றுடன் முடிவடைவதால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பான 'எக்சிட் போல் நேற்று வெளியானது. இதில், ஏ.பி.பி - சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 58-70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதில், ஏ.பி.பி - சிவோட்டர் பகுதிவாரியாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களைக் கொண்ட மேற்கு மாவட்டங்களில் 52 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி அதிக வெற்றிகளைப் பெற்றுவந்தது.

ஆனால், இந்த முறை திமுக கூட்டணி அதிக தொகுதிகளைப் பெறும் என்று ஏ.பி.பி கணித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 52 தொகுதிகளில் 33-35 தொகுதிகளைக் திமுக கைப்பற்றும் என்று கணித்துள்ளது. அதிமுக கூட்டணி 15 - 17 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் 24 தொகுதிகள் வரை அதிமுக இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!