EXCLUSIVE: அந்த ஒரு காரியத்தை செய்தால் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியும்..! திமுக பிரமுகர் கொடுத்த ஐடியா

By karthikeyan VFirst Published Nov 17, 2020, 12:01 PM IST
Highlights

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், பாஜகவால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும் ஏசியாநெட் ஆங்கில இணையதளத்திற்கு(Asianet Newsable) அளித்த பேட்டியில் திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், பாஜகவால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும் ஏசியாநெட் ஆங்கில இணையதளத்திற்கு(Asianet Newsable) அளித்த பேட்டியில் திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

கேள்வி: பீகாருக்கு அடுத்து, பாஜகவின் அடுத்த இலக்கு தமிழ்நாடு..

பீகாரில் நடந்தது கண்டிப்பாக தென்னிந்தியாவில் நடக்காது. தென்னிந்தியா முற்றிலும் வித்தியாசமான களம். வட இந்திய தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரச்னைகள் ஒருபோதும் தென்னிந்தியாவிற்கு பொருந்தாது. பிளவுபடுத்தும் பிரச்னைகளை விட, தென் மாநிலங்களில் முற்போக்கான மற்றும் வளர்ச்சி சார்ந்த விஷயங்களே முக்கியத்துவம் பெறும்.

பீகார் தேர்தலில் காங்கிரஸின் மெகா கூட்டணி தோற்றுவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுடன் சேரப்போவதில்லை என சமாஜ்வாதி கட்சி சொல்லிவிட்டது. அதையே தமிழ்நாட்டில் திமுகவும் செய்யுமா..?

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சரியான ஒத்திசைவு கூட்டணி. ஒட்டுமொத்த தேசமும் பாஜகவுக்கும் மோடிக்கும்(பிரதமர் நரேந்திர மோடி) வாக்களித்தபோது, தமிழ்நாட்டில் பாஜகவை துடைத்து எறிந்து, 38 சீட்டுகளை வென்றது திமுக-காங்கிரஸ் கூட்டணி. எனவே தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் புரிதல் நன்றாக இருப்பதுடன், இங்கு அரசியல் களம் முற்றிலும் வேறானது.

ஐபிஎஸ் அண்ணாமலை காவல்துறையிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார். குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி. எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் வரட்டும். அவர்கள் திராவிட கொள்கைகளை ஏற்று பின்பற்றினால் மட்டுமே தமிழ்நாட்டில் நீடிக்கவே முடியும். திராவிட கொள்கைகளை அந்நியமாக பார்க்கும் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்றவோ, வெற்றி பெறவோ முடியாது.

பாஜகவால் தமிழ்நாட்டு தேர்தலில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா..? 

தமிழ்நாட்டில் திராவிட அரசியலும், கொள்கைகளும் மட்டுமே ஜெயிக்கும். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லியே தீர வேண்டும். தமிழ்நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக எந்தவிதத்தில் முன்னேற்ற போகிறோம், மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் பேசாமல் வேறு எதையாவது பேசிக்கொண்டிருக்கும் பாஜகவை மக்கள் நிராகரிக்கப்போகிறார்கள். தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி போடும் பாஜகவால் ஒருபோதும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற முயலும் பாஜகவிற்கு, அந்த கட்சி நடத்தும் வேல் யாத்திரை போன்ற நடவடிக்கைகள் பயன்படுமா..?

தமிழ்நாட்டை பற்றி பேசும்போது, திராவிட கொள்கைகளுடன் அவர்கள் ஒத்துப்போக வேண்டும். அவர்களால் இங்கு ஒருபோதும் வரமுடியாது. மத்திய அரசால் இந்தியை திணிக்க முடியாது. அவர்களால் தமிழ்நாட்டில் ரூ.600 கோடியை சமஸ்கிருத வளர்ச்சிக்கு பயன்படுத்தி,  ஓட்டு கேட்க முடியாது. பாஜக எப்போதுமே உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட பாஜக, உயர்சாதியில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருப்பவர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
 

click me!