Exclusive:மற்ற கட்சிக்காரர்கள் நம்மை அசிங்கப்படுத்திடக்கூடாது.. அங்குலம் அங்குலமாக ரஜினி போடும் அரசியல் கணக்கு

By Thiraviaraj RMFirst Published Mar 6, 2020, 11:15 AM IST
Highlights

’பாயும் புலி’ ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க தயங்குறாருனு தெரியலயேனு சாதாரண மக்கள் மத்தியில் கூட இப்படியான பேச்சு இருந்தது. அதற்கு 2018ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.தமிழக அரசியலில் ரஜினிக்கான இடம் பரபரப்பாகவே காணப்படுகின்றது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ரஜினிக்கு செல்வாக்கு அதிகமாகி விட்டது. வருமானவரித்துறை ரஜினிக்கு காட்டி சலுகைக்கு 'நண்பர்களுக்கு கொடுத்த பணத்தில் வட்டி வாங்கியது' என்ற பதில் எல்லாம் தமிழக மக்கள் மறக்கவில்லை.

T.Balamurukan

’பாயும் புலி’ ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க தயங்குறாருனு தெரியலயேனு சாதாரண மக்கள் மத்தியில் கூட இப்படியான பேச்சு இருந்தது. அதற்கு 2018ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.தமிழக அரசியலில் ரஜினிக்கான இடம் பரபரப்பாகவே காணப்படுகின்றது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ரஜினிக்கு செல்வாக்கு அதிகமாகி விட்டது. வருமானவரித்துறை ரஜினிக்கு காட்டி சலுகைக்கு 'நண்பர்களுக்கு கொடுத்த பணத்தில் வட்டி வாங்கியது' என்ற பதில் எல்லாம் தமிழக மக்கள் மறக்கவில்லை.


பெரியார் பற்றி பேசி சர்ச்சைக்குள் சிக்கிக்கொண்டார் ரஜினி. இந்த நிலையில் ரஜனிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ராகேவந்திரா மண்டபத்தில் நடத்தினார். இந்த கூட்டம் அரசியல் நோக்கர்களிடமும் மற்ற அரசியல் கட்சிகளிடமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் உள்ள அலுவலகம் ராஜசேகர், இளவரசன், ஸ்டாலின் ஆகியோர் மாநில நிர்வாகிகளாக இருந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், மன்ற நடவடிக்கைகளில் ஒருதலைபட்சமான சில குழப்பங்கள் காரணமாக 2019ம் ஆண்டு அலுவலகம் பூட்டப்பட்டது. கடந்த ஒருவருடகாலத்திற்கு பின் அந்த அலுவலகம் அறை திறப்பட்டு அதில் மா.செக்கள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.


அந்த அலுவலகம் 25பேர் மட்டுமே உட்கார்ந்து பேசக்கூடிய அளவிற்கு மட்டுமே உள்ளது. எனவே பல மாவட்டச்செயலாளர்கள் நின்று கொண்டே இருப்பார்கள். போட்டோவை பார்த்தாலே அது தெரியும். மொத்தம் உள்ள 32 மாவட்டச்செயலாளர்களில் கடலூர் ,சென்னை, நாகை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டதால் 38 மா.செக்கள் அந்த அறைக்குள் உட்காரமுடியவில்லை. ரஜினி சார்பில் மாநில நிர்வாகியான சுதாகர், ராகவேந்திரா மண்டப நிர்வாகியான சிவராமகிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டுமே ரஜினி சார்பில் கலந்து கொண்டார்கள்.

 கூட்டம் நடைபெற்ற ராகவேந்திரா திருமண்டபத்திற்கு 10.40மணிக்கு, அந்த சிறிய அறைக்கு வருகை தந்தார் ரஜினி. எடுத்த எடுப்பிலேயே அவர், 'உங்கள் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. உங்களை திருத்திக்கொள்ள ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்' என்று தான் தனது பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.

உளவுத்துறை மூலம் ஒவ்வொரு மா.செக்கள் செய்யும் தில்லுமுள்ளு வேலைகளை பற்றிய அறிக்கை வைத்துக்கொண்டு தான் ரஜினி இந்த கூட்டத்தையை ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்படிதான் மா.செக்களை எச்சரித்தும் அனுப்பியிருக்கிறார் ரஜினி. ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஒழுங்கீனம் எனக்கு பிடிக்காது என்பது உங்களுக்கு தெரியும். இந்தநிலை தொடர்ந்தால் உங்களுடைய பதவிகள் பறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

நம் கட்சிக்கு மாற்று கட்சியில் இருந்து நிர்வாகிகள் வந்தால் அவர்களுக்கான மரியாதையை நம் மன்ற நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். தங்களுக்கு கீழ் இருக்கும் நிர்வாகிகள் தவறு செய்தால் அவர்கள் பற்றிய தவறுகளை தலைமைக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை இந்த இரண்டு விசயங்களும் மா.செக்கள் அனுப்பிய பட்டியல் எனக்கு திருப்திகராமானதாக இல்லை. அதில் பல்வேறு குளறுபடிகள் நிறைந்து காணப்படுகிறது. உங்களுக்கு ஒருமாதம் கால அவகாசம் தருகிறேன். உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் ரஜினி.

ஒவ்வொரு மாவட்டச்செயலாளர்களிடமும் தனித்தனியாக ரஜினி பேசவில்லை என்கிற வருத்தம் மா.செக்களிடம் இருக்கிறதாம். “நான் அரசியலுக்கு வருவேன்னு கடந்த ஆண்டு தான் சொன்னேன். அதுபடி வந்துட்டேன். நம்மளோட இலக்கு சட்டமன்றத்தேர்தல். அதற்கான வேலைகளை நாம் ஆரம்பித்தாக வேண்டும். கட்சியின் பெயர் கொடி சின்னம் எல்லாம் நான் பாத்துகிறேன். அதற்கான வேலைகள் டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மக்களை சந்தித்து மக்கள் பணி செய்ய வேண்டும். நமக்கு மக்கள்தான்  எஜமானர்கள்’’ என்று பேசிய ரஜினி., ’சரி மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்? நாம் அரசியலுக்கு வருவது பற்றியான பேச்சுக்கள் மக்கள் மனதில் என்ன இருக்கிறது’ என்றெல்லாம் கருத்து கேட்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய சில மாவட்டச்செயலாளர்கள் 'கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை சேர்க்காமல் இருக்கிறோம். ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை சேர்த்தது பாதியில் நிற்கிறது. நீங்கள் சொன்னதால் அந்த பணியையும் நிறுத்திட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த ரஜினி, 'அதுக்கு ஒரு காரணம் இருக்கு… நம்ம உறுப்பினர்கள் சேர்க்கை சேர்த்து வச்சுருந்தோம்னா இந்நேரம் மற்ற கட்சிகள் ரஜினி கட்சியில் இருந்து 100 பேர் எங்க கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என்று சொல்லி நம்மள அசிங்கப்படுத்துவாங்க. அதனால தான் கொஞ்சம் வெயிட் பன்னுங்கனு சொன்னேன். இப்ப புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் ஒகே…

பல மாவட்டச்செயலாளர்களுக்கே குழப்பம் நம்ம தலைவர் யாருபக்கம் இருக்காரு. எந்த கூட்டணிக்கு போக போறாருனு தெரியலையேனு இருந்தவுங்களுக்கு இந்த கூட்டத்தில் முடிவு தெரிந்திருக்கிறது. அதற்கான பதிலை தலைவர்கிட்டேயே நேரடியாக கேட்கும் வாய்ப்பு மா.செக்களுக்கு கிடைத்தது. அந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, ’இஸ்லாமியர்கள் முழுமையாக பாஜகவை எதிர்க்கும் போது நாம் எப்படி பாஜகவை ஆதரிக்க முடியும்? மத்தியில் பாஜக, காங்கிரஸ், தமிழ்நாட்டில் அதிமுக. திமுக இவங்க நாளு பேர்களுடன் நான் கூட்டணி வைக்க போறது இல்லை. ‘நம்ம வழி தனி வழி’ சட்டமன்றத்தேர்தலில் நாம் தனித்து போட்டியிடப்போவதில்லை. கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. நம் தலைமையில் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வருபவர்களை ஏற்றுக்கொள்வோம்’’ என்ற போது மாசெ க்கள் தங்களையும் அறியாது ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.


கட்சி ஆரம்பித்தவுடன் மக்கள் மன்றம் இருக்குமா? தலைவரே.! மன்றம் வேறு: கட்சி வேறு இரண்டையும் குழப்பவேண்டாம். மன்றத்தில் இருந்து சிலர் கட்சி பொறுப்புக்கு வருவார்கள். மற்றவர்கள் மக்கள் மன்றத்தில் பணி செய்வார்கள் என்று தெளிவுபடுத்தி பேசியிருக்கிறார் ரஜினி. அரசு பதவிகளில் இருப்பவர்கள் மாவட்டச்செயலாளர்களாக இருக்க கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அரசு பதிவியில் இருக்கும் மற்ற நபர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டச்செயலாளர் மட்டும் இன்னும் மாற்றப்படவில்லை. அவர் மீது நிறைய புகார்கள் இருப்பதாகவும் அப்படி இருந்தும் அவரை நீக்கம் செய்யாமல் சுதாகர் காப்பற்றி வருவதாகவும் ரஜினிமன்ற நிர்வாகிகள் புகார் வாசித்து வருகிறார்கள்.


திருச்சி மாவட்டச்செயலாளர் கலில் பேசும் போது “இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி நம்ம நிலைப்பாடு என்ன தலைரே.! என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த ரஜினி..’ இஸ்லாமிய மதகுருமார்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இஸ்லாமியர்களை பாதிக்க கூடிய எந்த திட்டத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன் என்று சொன்னேன். நீங்கள் வாருங்கள் இந்த சட்டத்தை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுவோம் என்று அழைத்திருக்கிறேன். அவர்கள் வந்தால் நான் அவர்களை அழைத்துக்கொண்டு போய் அமித்ஷாவுடன் பேசுவோம் என்றார் ரஜினி.


மன்ற நிர்வாகிகள் மத்தியில் நிறைய புகார்களும் குளறுபடிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதை தீர்ப்பதற்குள் ரஜினி அரசியல் கட்சி பரிணாமத்திற்கு தாவுவது எந்த வகையில் நல்லதாக இருக்கும் என்று தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் விபரம் அறிந்தவர்கள். எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்..!

click me!