ஜெயலலிதாவின் கால்களை தவிர முகத்தை நிமிர்ந்து பார்க்காதவர்கள் நீங்கள்..! எஸ்வி சேகர் பதிலடி.

By T BalamurukanFirst Published Aug 6, 2020, 9:19 AM IST
Highlights

அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் அதிமுகவிற்கு அட்வைஸ் கூறியுள்ளது பற்றி அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 
 


அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் அதிமுகவிற்கு அட்வைஸ் கூறியுள்ளது பற்றி அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமைச்சர்.... "திமுகவை பொறுத்தவரை சர்வாதிகாரக் கட்சி, குடும்ப ராஜ்யம் உள்ள கட்சி, அந்த அதிருப்தி, குமுறலின் வெளிப்பாடாக கு.க.செல்வம் வெளியே வந்திருக்கிறார். தேர்தலின் போது இன்னமும் நிறைய பேர் திமுகவில் இருந்து வெளியே வருவார்கள். பிள்ளையார் சுழியாக முதல் நபராக கு.க.செல்வம், வெளியே வந்திருக்கிறார். ஆனால் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியிலிருந்து அண்ணாவை அகற்றி விட சொல்கிறார்.
இவர் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டார். மயிலாப்பூரில் அவர் அண்ணா திமுக கொடியை காண்பித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு அதிமுகவும், அண்ணா உருவம் பொறித்த கொடியும் தேவைப்பட்டது. உண்மையிலேயே மானம், ரோஷம் அவருக்கு இருக்குமானால் ஐந்து வருடங்கள் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்து பெற்ற சம்பளத்தை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

இப்போதும் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான பென்சனை எஸ்.வி.சேகர் பெற்றுக்கொண்டு இருக்கிறார். அதையும் அவர் திருப்பி கொடுக்க வேண்டும். அல்லது இனிமேல் வாங்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும்; செய்வாரா எஸ்.வி சேகர்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர்.. அதிமுக குறித்த ஆவணங்கள் டில்லியில் இருப்பதாக அவர் கூறுவது ஆதாரமில்லாமல் விளம்பரத்திற்காக பேசும் பேச்சு. அவையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள எஸ்.வி.சேகர்: நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்ததும் இல்லை. நான் விசுவாசியல்ல, நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத் தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன்.எம்ஜிஆர். ஜெயலலிதா படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா? என் எம்எல்ஏ சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது, அதிமுகவினால் அல்ல.

என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்! யோசியுங்கள், புரியும்; இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். “மான ரோஷம்” நல்ல காமெடி, என அமைச்சர் ஜெயக்குமார் மானம் ரோசம் பற்றி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் எஸ்.வி.சேகர்.

click me!