சின்னம்மா வந்தால் அதிர்வலைகள் ஏற்படும்..! அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா போட்ட குண்டு..!

By vinoth kumarFirst Published Jul 4, 2019, 12:45 PM IST
Highlights

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் நிச்சயமாக அதிர்வலைகள் ஏற்படும் என்று அதிமுகவில் இணைய உள்ள இசக்கி சுப்பையா பேசியிருப்பது தற்போது அந்த கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் நிச்சயமாக அதிர்வலைகள் ஏற்படும் என்று அதிமுகவில் இணைய உள்ள இசக்கி சுப்பையா பேசியிருப்பது தற்போது அந்த கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமமுகவில் தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா. தற்போது தினகரன் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதே இசக்கி சுப்பையாவின் கட்டிடத்தில் தான். மேலும் தென் சென்னை தொகுதியில் தினகரன் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவரும் இசக்கி சுப்பையா தான். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமமுகவில் நீடிக்க இசக்கி சுப்பையா விரும்பவில்லை.

 

இதனை அடுத்து தனது ஆதரவாளர்களை அழைத்து தென்காசியில் தனக்கு சொந்தமான ரிசார்ட்டில் மிகப்பெரிய கூட்டம் நடத்தினார் இசக்கி சுப்பையா. இது குறித்து அப்போதே ஆசியநெட் தமிழில் விரிவாக எழுதியிருந்தோம். மேலும் இசக்கி சுப்பையை தினகரனுக்கு டாடா சொல்லப்போவதையும் கூறியிருந்ததோம். கூறியபடியே அதிமுகவில் இசக்கி சுப்பையா இணைய உள்ளார். 

இந்த நிலையில தினகரன் குறித்த கருத்து வேறுபாடு குறித்து 2 நாட்களுக்கு முன்னர் குற்றாலத்தில் இசக்கி சுப்பையாக செய்தியாளரகளை சந்தித்து பேசினார். பல்வேறு விஷயங்களை அவர் பேசினாலும் ஊடகங்களின் கவனம் பெறாத ஒரு முக்கிய விஷயத்தை அவர் கூறினார் என்பதை அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். 

அதாவது சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நீங்கள் அவருடன் இணைய வாய்ப்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த இசக்சி சுப்பையா அதிமுக யாரிடும் உள்ளதோ அவர்களுடன் தான் எங்கள் பயணம் தொடரும் என்றார். மேலும் சசிகலா வந்த பிறகு அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் தயங்காமல் இசக்கி சுப்பையா பதில் அளித்தார். 

அதாவது சசிகலா மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் அப்படி இருக்கையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நிச்சயம் அதிர்வலைகள் ஏற்படும் என்று கூறினார் இசக்கி சுப்பையா. அதிமுகவில் இணைய உள்ள இசக்கி இப்படி சசிகலாவை புகழ்ந்து பேசியது தற்போது முதலமைச்சர் மற்றும் ஓபிஎஸ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் தான் கூறியது அமமுகவில் அதிர்வலைகள் ஏற்படும் என்று தானே தவிர அரசியலில் இல்லை என்று தற்போது இசக்கி விளக்கம் அளித்து வருகிறார்.

click me!