முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலை….நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன சோகம்…..

Asianet News Tamil  
Published : Dec 16, 2016, 08:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலை….நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன சோகம்…..

சுருக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலை….நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன சோகம்…..

உடல்நலக் குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்ற சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி, கடந்த அக்டோபர் மாதம் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 1 ம் தேதி அவர்  ஒவ்வாமை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 7-ம் தேதி திரு.கருணாநிதி வீடு திரும்பினார். தொடர்ந்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை கருணாநிதியின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதையடுத்து சென்னை முழுவதும் போஸீசார் குவிக்கப்பட்டனர். ராஜாத்தி அம்மாள், கனிமொழி உள்ளிட்டோர் உடனடியான கருணாநிதியை சந்தித்தனர்.
ஆனால் நள்ளிரவில் சளித் தொல்லை ,தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக  காவேரி மருத்துவமனையில் திரு.கருணாநிதி, மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்ற சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி, பரிதாபமாக காரில் வந்த காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.

ஆனால் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்,கருணாநிதிக்கு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!