அத்தை ஜெயலலிதாவிற்காக வரிந்து கட்டி வந்த அண்ணன் மகள்...!! கண்ணியக் குறைவு ஏற்பட்டால் சும்மா இருக்க மாட்டேன் என நீதிமன்றத்தில் வழக்கு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 1, 2019, 4:50 PM IST
Highlights

அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும்,  தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்

தன்னுடைய அனுமதியில்லாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகிவரும் தலைவி என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக,  மக்கள் மனம் கவர்ந்த தலைவியாக வாழ்ந்து மறைந்தவர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, அவர் உயிருடன் இருந்தவரை தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதுகாப்பாகவும்,  தமிழர் நலன் காக்கும் அரணாகவும் விளங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே, யாரும் அடையா பெருவாழ்வு வாழ்ந்து  அத்தலைவி கால் நூற்றாண்டுக்கும்மேலான கோலோச்சிய அரசியலை மையமாக வைத்து திரைப்படம் இயக்க பல முன்னணி இயக்குனர்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.  இந்நிலையில்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் திரைப்படம்இயக்கிவருகிறார். 

இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதே போல் கெளதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக (வெப் சீரியல்) தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தன் தந்தையில் சகோதரியும் தனக்கு அத்தையுமான ஜெயலலிதாவை வைத்து தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும்,  தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடதக்கது.
 

click me!