முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தாத்ரேயாவின்  ஒரே மகன் மாரடைப்பால் மரணம்…. 21 வயதில் மாரடைப்பா ?

Asianet News Tamil  
Published : May 24, 2018, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தாத்ரேயாவின்  ஒரே மகன் மாரடைப்பால் மரணம்…. 21 வயதில் மாரடைப்பா ?

சுருக்கம்

Ex central minister Bandaru son died heart attack

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தாத்ரேயாவின் 21 வயதே நிரம்பிய  மகன் வைஷ்ணவ் திடீர் மாரடைப்பால் காலமானார்.

பண்டாரு தாத்ரேயா செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

21 வயதே நிரம்பிய இவரது ஒரே மகன் பண்டாரு வைஷ்ணவ், ஹைதிரபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வைஷ்ணவ் தனது குடும்பத்தினருடன், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வைஷ்ணவ், முஷிராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வைஷ்ணவ், இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு உயிரிழந்தார்.

21 வயதே நிரம்பிய  இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியுல் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர்  வைஷ்ணவ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!