"நீதிமன்றம் சென்றால் ஓட்டெடுப்பு செல்லாது" - முன்னாள் துணை சபாநாயகர் திட்டவட்டம்

First Published Feb 19, 2017, 10:49 AM IST
Highlights


ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து விட்டால் மற்றொரு தீர்மானத்துக்கு 6 மாதம் இடைவெளி இருக்க வேண்டும்.

ஆனால் தமிழக சட்டபேரவையில் ஒரே தீர்மானத்தை 2 முறை முன் மொழிந்தால் அது செல்லாது என கூறுகின்றனர் தமிழக சட்டபேரவையில் சபாநாயகராக இருந்தவர்கள்.

ஏற்கனவே சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தய்யா கூறும்போது எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக முன் மொழிந்த போது அதில் எந்த நிகழ்வும் நடக்காமல் தோல்விலேயே முடிந்தது.

ஆனால் 2 மணி நேர இடைவெளிக்குள் மற்றொரு தீர்மானமும் முன் மொழியப்பட்டது.

இது சட்டப்படி செல்லாது என தெரிவித்தார்.இதே போன்று அம்பாசமுத்திரத்தில் செய்தியர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இதே கருத்தை தெரிவித்தார்.

மேலும் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, எடப்பாடி பழனிச்சாமியின் தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் சென்றால் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவித்தார்.

ஒரே தீர்மானத்தை 2 முறை முன்மொழிவது என்ற விதி சட்டத்தில் கிடையாது.

எனவே நீதிமன்றம் சென்றால் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த அந்த தீர்மானம் ரத்து செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!