"எப்பவுமே நீ முதல்வர்தான் பன்னீரு" - உருகும் ஓபிஎஸ் ஆசிரியரின் மனைவி…

 
Published : Feb 19, 2017, 09:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
"எப்பவுமே நீ முதல்வர்தான் பன்னீரு" - உருகும் ஓபிஎஸ் ஆசிரியரின் மனைவி…

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். அவர் படிக்கும் காலத்தில் ஓபிஎஸ்க்கு ஆசிரியராக இருந்தவர் அய்யாசாமி. மறைந்த இந்த ஆசிரியரின் மனைவி திருமதி ஈஸ்வரி அம்மாள், ஓபிஎஸ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமி ஜெயித்ததால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி அம்மாள் மிகுந்த உருக்கத்துடன், ஓபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நீங்கள் எனது கணவரிடம் டியூஷன் படித்தீர்கள்…அப்போது எங்கள் வீட்டிற்கு வருவீர்கள்..மற்ற மாணவர்கள் எல்லாம் அரட்டை அடிக்கும் போது நீங்கள் மட்டும் அமைதியாக யாரிடமும் பேசாமல் படித்துக் கொண்டிருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உங்களை ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும்..மற்ற மாணவர்களை கவனித்துக் கொள்ளும்படி ஆசிரியர் வலியுறுத்துவார்.நீங்க சிறந்த மாணவர், யாரிடம் பேசினாலும் கம்பீரமாக பதில் சொல்ல வேண்டும்…சத்தம் போட்டு பேச வேண்டும்.. மௌன சாமியாக இருக்கக்கூடாது எனஆசிரியர் உங்களிடம் வலியுறுத்தி சொல்வார்.

ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று உயர்ந்தீர்கள்..அவருக்குப் பிறகு முதலமைச்சராகி நன்கு ஆட்சி செய்தீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு சிறந்தவரான நீங்கள் சசிகலாவிடம் ஏமாந்து விட்டீர்கள் என வருத்தத்துடன்  கூறியுள்ளார்.

சசிகலாவிடம் ராஜினாமா கடிதத்தை  கொடுத்துவிட்டு நீங்கள் வெளியே வந்த போது உங்கள் மனதில் கொதிப்பு இருந்ததைப் பார்த்து தாய் என்ற முறையில் நான் அழுது புலம்பினேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அய்யோ பன்னீரு ஏமாந்துட்டாயேப்பா என மிகவும் வருந்தினேன்…நீ தமிழகத்திற்கு முதலமைச்சராக இல்லையென்றால் என்னப்பா? உனக்கு நாங்கள் இருக்கிறோம்…இப்பதானப்பா உனக்கு வீரம் வந்திருக்கு…நீ தானப்பா எங்களுக்கு எப்பவும் முதல்வர்… என மிகுந்த உருக்கத்துடன் ஓபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு