அதிமுக எம்எல்ஏக்கள் இனி தொகுதிக்கே செல்ல முடியாது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொக்கரிப்பு

 
Published : Feb 22, 2017, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
அதிமுக எம்எல்ஏக்கள் இனி தொகுதிக்கே செல்ல முடியாது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொக்கரிப்பு

சுருக்கம்

கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு திமுக உள்பட
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் சட்டப்பேரவை எதிர்க்கட்சிகளான திமுக,
காங்கிரஸ் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது, திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை, சட்டப்பேரவை பாதுகாவலர்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது, அவர் மீது தாக்குதல்
நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவர்னரிடம் திமுக சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில்
தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது தவறு என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் திமுக சார்பில் இன்று ஒரு
நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்து வருகிறது. திருச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரத
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து
கொண்டு பேசியதாவது.
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற விதி இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள், 10 நாட்களுக்கு மேலாக, சொகுசு ரிசார்ட்டில் தங்கி
இருந்தனர். அவர்களை, மிரட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதனால், அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில்
கலந்து கொண்ட எம்எல்ஏக்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. இதனால், அவர்கள் யாரும் சொந்த தொகுதிக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!