ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் டெல்லி பயணம்! தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

By vinoth kumarFirst Published Dec 6, 2018, 3:11 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடமிருந்து வந்த திடீர் அழைப்பை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். இதனால் இளங்கோவனுக்கு முக்கிய பொறுப்பு அல்லது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடமிருந்து வந்த திடீர் அழைப்பை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். இதனால் இளங்கோவனுக்கு முக்கிய பொறுப்பு அல்லது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல் அனைவரும் அறிந்த ஒன்று. ப.சிதம்பரம் ஒரு அணியாகவும்,  ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு அணியாகவும், திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு அணிகள் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கட்சி பதவியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வருவதாக பேசப்படுகிறது. அனைத்து கோஷ்டி தலைவர்களும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 

5 மாநில சட்டப்பேரவையில் தேர்தல் நடந்ததால் ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பிசியாக இருந்தனர். இந்நிலையில் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா அல்லது முக்கிய பொறுப்பு வழங்க போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!