இபாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் யாரும் வரக்கூடாது..! முதல்வர் நாராயணசாமி தகவல்.!

By T BalamurukanFirst Published Jun 16, 2020, 8:45 PM IST
Highlights

தமிழகத்துடனான புதுச்சேரி எல்லைகள் மூடப்படும் என பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
 

தமிழகத்துடனான புதுச்சேரி எல்லைகள் மூடப்படும் என பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு தொடர் நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இரண்டு கட்டங்களாக இன்றும், நாளையும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, முதல் நாளான இன்று 21 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அப்போது பேசிய பிரதமர் மோடி, பிற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனாவால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் சிகிச்சைக்கு பின் குணமடைவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 50 சதவீதத்துக்கு மேலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் என்றார்.

பிரதமருடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளார்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, "பிரதமருடன் பேச இன்று எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். மாநில அரசு வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மாநில அரசுக்கு பிரதமர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது".மருத்துவ சிகிச்சையை தவிர மற்ற எந்த காரணத்துக்காகவும் எல்லைக்குள் நுழைய அனுமதி கிடையாது.

தமிழகத்துடனான புதுச்சேரி எல்லைகள் நாளை முதல் மூடப்படும் என தெரிவித்த பிரதமர் மோடி, மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார். சென்னையில் இருந்து "இபாஸ்" கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை என்றார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வரும்போது நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால் தான் புதுச்சேரிக்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் கடைகள் செயல்படும் நேரங்களை குறைப்பது குறித்து நாளை வியாபாரிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்படும். முககவசம் அணியவில்லை என்றால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என்றார்.
 

click me!