அத்துமீறும் போலீஸால் தமிழக அரசிற்கு அவப்பெயர்..., எச்சரிக்கும் சீமான்!!

By Thiraviaraj RMFirst Published Mar 26, 2020, 11:44 PM IST
Highlights

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கும், விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

T.Balamurukan

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கும், விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்." இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 

"கொரோனோ கொடிய நுண்ணியிரித் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வண்ணம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு நடைபெற்றுவருகிறது. மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் விடுத்த அறிவிப்புகளை ஏற்றும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்குச் செவிசாய்த்தும் நாடு முழுவதும் இந்தப் பேரிடர்கால ஊரடங்கிற்கு மக்கள் பெரும் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். இந்நேரத்தில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எதிர்வரும் நாட்களிலும் இன்னும் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் அரசுக்கு ஒத்துழைத்து ஊரடங்கை முழுமையாக வெற்றிப்பெறச் செய்வதன்மூலம் கொரோன நுண்ணியிரியின் நோய்த் தாக்கத்திலிருந்து நாட்டை முழுமையாக விடுவிப்போம்.

அதே நேரத்தில், காலம் தாழ்ந்து அவசரகதியில் ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து அறிவித்த போதும் மக்கள் நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்து அதற்கேற்றவாறு தம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டு அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் இந்தச் சூழ்நிலையில் ஆங்காங்கே நடைபெறும் காவல்துறையின் ஓரிரு அத்துமீறியத் தாக்குதல் சம்பவங்கள் தமிழக அரசு சிறப்பாக முன்னெடுத்துவரும் போர்க்கால அடிப்படையிலான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் மீதான செயல்பாடுகளுக்குப் பெருத்த களங்கத்தை விளைவிப்பத்துடன் அரசிற்கு அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது.

click me!