ரஜினி கட்சி தொடங்கினாலும் அதிமுகதான் ஆட்சியை கைப்பற்றும்..!! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2020, 5:22 PM IST
Highlights

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளதால் 2021இல் அதிமுக அரிதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் 2021இல் அதிமுக அரிதி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கி வைத்தப் பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பெயர் அளவிற்கு தான் பட்டியல் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கட்சி பதவிகளில் பட்டியலினத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்குவதில்லை என குற்றம்சாட்டினார். 

திமுகவில் குழப்பங்கள் இருப்பதால் தான் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்தி அதையும் பெருமைபடுத்திக் கொள்வதாக கூறினார். 
திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெறாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளதால் 2021இல் அதிமுக அரிதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தார். 

முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாநில அலுவகத்தினை  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது தமிழக அரசு அதற்கான தெளிவான அரசாணையை தற்போது வெளியீட்டு இருக்கிறார்கள். எனவே அரசு வகுத்துள்ள வரையறைக்கு உட்பட்டு உள்ள நிறுவனங்கள் மட்டும் தான் அங்கு துவங்க முடியும் என்றும் எனவே அதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். 

அதேபோல் மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு  அதிமுக என்றும் பச்சைகொடி காட்டும் என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களை அரசு எதிர்க்கும் இது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். 

 

click me!