தப்பித்தார் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டி வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த உடுமலை கவுசல்யா..!

By Thiraviaraj RMFirst Published Jun 4, 2019, 3:34 PM IST
Highlights

இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால், மத்திய அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த உடுமலை கவுசல்யா வழங்கிய மன்னிப்பு கடிதத்தை ஏற்று அவருக்கு மீண்டும் மணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால், மத்திய அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த உடுமலை கவுசல்யா வழங்கிய மன்னிப்பு கடிதத்தை ஏற்று அவருக்கு மீண்டும் மணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர் – கவுசல்யா கடந்த 2015-ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சங்கர் உடுமலை நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இதையடுத்து, கவுசல்யா சங்கர் சமூக நீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். சங்கர் கொலை செய்யப்பட்டதை அடுத்து கவுசல்யா மீது பரிதாபப்பட்ட தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் குடிசை வீடாக இருந்த அவரது வீடு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டது. 

சங்கரின் தந்தைக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கவுசல்யாவுக்கு மத்திய அரசு ஏற்பாட்டின் பேரில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் சக்தியை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இவருடைய போக்கு பிடிக்காததால் ஊரிலும் இவருக்கு எதிர்ப்பு உண்டானது.

 

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டது. கண்டோன்மென்ட் முதன்மைச் செயல் அலுவலர் ஹரீஸ் வர்மா, கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், மூன்று மாதங்களுக்கு பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 

click me!