Online gambling:பல குடும்பங்களை பாழாக்கும் இதனை தடை செய்யுங்கள்..ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

Published : Jan 03, 2022, 03:08 PM ISTUpdated : Jan 03, 2022, 03:20 PM IST
Online gambling:பல குடும்பங்களை பாழாக்கும் இதனை தடை செய்யுங்கள்..ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

சுருக்கம்

இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் மணிகண்டன் என்பவர் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் தரன், தாஹன் என்ற இரு குழந்தைகளும் இருந்தனர்.  மணிகண்டன் தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாத காலமாக அவர் வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்றும் உறுதியாகத் தெரியவில்லை. மேலும், மனிகண்டன் அவரது நண்பர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடன் பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடனுக்கு அவர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்ததே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் மணிகண்டன் ரூ.1 கோடி வரை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார் அதனை சைபர் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் அதேபோல் வாக்குவாதம் நடந்ததாகவும் பின்னர் அவர் வீடு நீண்ட நேரம் நிசப்தம் சூழ இருததாகவும் திறந்துகிடந்த கதவின் வழியே பார்த்தபோது நடந்த அசம்பாவிதம் தெரிந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் போலீஸில் கூறியுள்ளனர். வாக்குவாதம் முற்றி மணிகண்டன் அவரது மனைவி பிரியா, மற்றும் தரன், தாஹன் ஆகியோரை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை, ஆய்வின்படி மணிகண்டன் மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொன்று விட்டு இரு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தியும் கொலை செய்து விட்டு, தானும் வேட்டியால் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலான் என துரைப்பாக்கம் போலீஸார் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் மணிகண்டன் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், இந்த திமுக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அம்மா அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்