ஓபிஎஸ்-யும் என்னையும் பிரிக்க முடியாது...நண்பேன்டா பாணியில் முதல்வர் பளீச்

 
Published : Jun 26, 2018, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஓபிஎஸ்-யும் என்னையும் பிரிக்க முடியாது...நண்பேன்டா பாணியில் முதல்வர் பளீச்

சுருக்கம்

EPS replyed DMK ledar commands

தன்னையும், துணை முதல்வர் ஓபிஎஸ்சையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. கிமு, கிபி வார்த்தைகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியது. இசை நிகழ்ச்சி குறித்து துரைமுருகன் காமெடி செய்தது என்று நிறைய கலகலப்பான விஷயங்கள் அரங்கேறின. 

இதனையடுத்து  திமுகவை சேர்ந்த  துரைமுருகன், முதல்வர் பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் நட்பு குறித்து கேள்வி எழுப்பினார். சிரித்தப்படியே காமெடியாக உங்களின் நட்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார். 

இதற்கு முதல்வரும் காமெடியாக பதில் கூறினார். யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை ஒன்றும் செய்ய முடியாது துரைமுருகனுக்கு முதல்வர் பழனிச்சாமி பதிலளித்துள்ளார். 

நாங்கள் எப்போது ஒற்றுமையாக இருப்போம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. எங்களது ஒற்றுமையை பார்த்து அண்ணனுக்கு கண் உறுத்துகிறதா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!