கஞ்சா, கொக்கைன்,ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் போதை பொருள் புழக்கம்-ஸ்டாலினை விளாசும் எடப்பாடி

Published : Mar 01, 2024, 11:59 AM IST
கஞ்சா, கொக்கைன்,ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் போதை பொருள் புழக்கம்-ஸ்டாலினை விளாசும் எடப்பாடி

சுருக்கம்

கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் எளிதாக கிடைத்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை எளிதில் போதை மருத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும். 

மாபியா தலைவனுக்கு முதல்வர் குடும்பத்தோடு நெருக்கம்

மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த விடியா திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

கோடிக்கணக்கான பரிசு அறிவித்து ஆசைக்காட்டும் ஆன்லைன் சூதாட்டம்.. 2 மாதங்களில் 3வது உயிரிழப்பு-அன்புமணி வேதனை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!