தகுதியறிந்து பொறுப்பை வழங்கிய ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்... வாழ்த்து பெற்ற எம்.ஏ.ஆர்..!

Published : Nov 13, 2020, 05:47 PM IST
தகுதியறிந்து பொறுப்பை வழங்கிய ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்... வாழ்த்து பெற்ற எம்.ஏ.ஆர்..!

சுருக்கம்

அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மருது அழகுராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மருது அழகுராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

தேர்தல் பணிகளையும், கட்சிப் பணிகளையும் விரைவுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நமது அம்மா நாளிதழ் ஆசிரியரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான மருது அழகுராஜ், முன்னாள் ஊடகவியலாளரும், எம்.பி.,யுமான ரபி பெர்னார்ட் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருது அழகு ராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். சத்தியன், மருது அழகுராஜ், வைகைசெல்வம் அதிகமாக கலந்து கொண்டால் அரசின் சாதனைகளை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்ல முடியும் எனவும், ரவிபெர்ணாட் ஊடகத்துறையில் இருந்தவர் என்பதாலும், அஸ்பயர் சுவாமி நாதன் ஊடகத்துறையில் உள்ளவர்களிடம் அதிக தொடர்புகளை கொண்டுள்ளார் என்பதாலும் இந்த மூவருக்கும் கூடுதலாக ஊடக ஒருங்கிணைப்பாளர் பதவியை அதிமுக தலைமை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்