லண்டன் தப்பிய கார்த்திக் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு... சிதம்பரம் குடும்பத்துக்கு மேலும் சிக்கல்...!!!

Asianet News Tamil  
Published : May 19, 2017, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
லண்டன் தப்பிய கார்த்திக் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு... சிதம்பரம் குடும்பத்துக்கு மேலும் சிக்கல்...!!!

சுருக்கம்

enforcemnet case on karthi chidambaram

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரத்தின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருந்தது. இதை அடிப்படையாக வைத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சி.பி.ஐ. வழக்கு  பதிவு செய்த, கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குநர்கள்பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி, செஸ் மீடியா, அட்வான்ட்ஜேட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் அமலாக்கப்பிரிவும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

இவர்களிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு இனிமேல் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடு

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சட்டவிரோதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வௌிநாடுகளில் இருந்து முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு நிறுவனத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுக்கொடுத்தார் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. இதன் மூலம் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்த பணத்தை நேரடியாகப் பெறாமல்  அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங்நிறுவனம் மூலம் இந்த பணத்தை கார்த்தி சிதம்பரம் பெற்றார் என புகார்கூறப்பட்டது.

சி.பி.ஐ. வழக்குப்பதிவு

இதையடுத்து, முன்னாள் மத்தி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப் பதிவும் சி.பி.ஐ. செய்தது.

சொத்துக்கள் முடக்கம்?

இந்நிலையில், சி.பி.ஐ. செய்த வழக்கின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் மீது மத்திய அமலாக்கப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தும் அமலாக்கப்பிரிவினர், இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களையும் கூட முடக்கும் சூழல் ஏற்படும்.

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!
ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!