பொது மக்கள் மீதான அடுத்த ஹெவி அட்டாக்…. தமிழ்நாடு மின்சார வாரியம் என்ன செய்யப் போகிறது தெரியுமா ?

 
Published : Jun 21, 2018, 09:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பொது மக்கள் மீதான அடுத்த ஹெவி அட்டாக்…. தமிழ்நாடு மின்சார வாரியம் என்ன செய்யப் போகிறது தெரியுமா ?

சுருக்கம்

Electricity connecting charges will be increase heavely

தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணத்தை  உயர்த்த மினசார வாரியம் முடிவு  செய்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்வு நம்மை தலைசுற்ற வைக்கப்போவது என்னவோ உண்மை.

தமிழக அரசு கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியது. தமிழக மக்களுக்கு அது பெரும் சுமையாக இருந்தது. எதிர்கட்சிகள் பல போரட்டங்களை நடத்தின. ஆனால் அதற்கு எந்த பலனுமில்லை.

தமிழத்தைப் பொறுத்தவரை மொத்தம்  3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், 21 லட்சம் விவசாய இணைப்புகளும், 3 லட்சம் தொழிற்சாலை இணைப்புகளும், 30 லட்சம் வர்த்தக நிறுவனங்களுக்கான இணைப்புகளும் உள்ளன.

இந்நிலையில் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

ஏன் இந்த கட்டண உயர்வு என்பதற்கு மின்சார வாரியம் சில சப்பைக்கட்டு காரணங்களையும் கூறியுள்ளது. அதாவது வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.

கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான கட்டணத்தை கேட்டால் நீங்க தலைசுத்தி விழுந்துவிடுவீர்கள்.

சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற தற்போது ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ரூ.9,800 ஆக உயர்த்தப்படுகிறது.

மும்முனை மின்சார இணைப்புக் கட்டணத்தை ரூ.5,050-ல் இருந்து ரூ.27,660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது..

புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,600-ல் இருந்து ரூ.9,800 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.5,050-ல் இருந்து ரூ.12,060 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர் பகுதிகளில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள கட்டணம்தான் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும். மின் இணைப்பு பெறவே இவ்வளவு கட்டணம். மீண்டும் மின்சாரம் இல்லாத கற்காலத்துக்கு போக வேண்டியதுதான்.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்