புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி கொடுக்கும் ஷாக் என்ன தெரியுமா?

Asianet News Tamil  
Published : Apr 03, 2018, 11:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி கொடுக்கும் ஷாக் என்ன தெரியுமா?

சுருக்கம்

Electricity charges hike in puducherry state shock for people

புதுச்சேரி மாநிலத்தில் திடீர் என மன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாக புதுச்சேரி மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.1.10-லிருந்து, ரூ.1.30-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் .,1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இது தொடர்பாக  புதுச்சேரி மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், : வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் 100 யூனிட் வரை ரூ.1.10-லிருந்து 20 பைசா உயர்ந்து ரூ.1.30-ஆகவும், 201 - 300 யூனிட் வரை ரூ.3.50-லிருந்து 45 பைசா உயர்ந்து ரூ.3.95-ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.4.60-லிருந்து 50 பைசா உயர்ந்து ரூ.5.10-ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் 100 யூனிட் வரை ரூ.4.90-லிருந்து 25 பைசா உயர்ந்து ரூ.5.15-ஆகவும், 101 - 250 யூனிட் வரை ரூ.5.60-லிருந்து 55 பைசா உயர்ந்து ரூ.6.15-ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் ரூ.6.25-லிருந்து 60 பைசா உயர்த்தப்பட்டு ரூ.6.85-ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திடீர் மின் கட்டண உயர்வு புதுச்சேரி மக்களுக்கு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!