நாளை முதல் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு.. ரகசியம் காக்கப்படும் என தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2021, 2:01 PM IST
Highlights

தற்போது நாட்டின்  அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலை  எதிர்கொள்ள கடந்த ஏப்ரல் மாதத்தில் பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம். வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய உள்ளனர்.  

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  உள்ளிட்ட 7300 பேரின் தபால் வாக்குகள் நாளை முதல் வீடுகளுக்கே சென்று பெறப்பட உள்ளதாக சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தபால் வாக்குகளை கையாளக்கூடிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி  தேர்தல் நுண்பார்வையாளர்கள் மற்றும் தபால் வாக்குச்சீட்டு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.  இதனை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும்  ஆணையருமான பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்று திறளானாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தபால் வாக்கு வீடுகளிலே சென்று பெறும் முறை இந்த முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.சென்னையில் 7300 பேர் இந்த முறையில் வாக்களிக்க உள்ளனர், அவர்களுக்காக 16 தொகுதிகளுக்கும் 70 குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 31ம் தேதி வரை இந்த தபால் வாக்குகள் வீடுகளுக்கே சென்று பெறப்பட உள்ளது. ஒரு குழு நாள் ஒன்றுக்கு 15 பேரிடம் தபால் வாக்குகள் பெற உள்ளது. 

வாக்களிப்பதன் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறுவதால் இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓட்டு போட வேண்டுமானால் பிபிஇ கிட் பயன்படுத்தி தான் ஓட்டு போட முடியும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் ஓட்டு போட சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டுக்கு அதிகாரி செல்லும் போது இரண்டு முறையும் ஓட்டு போடும் நபர் இல்லை என்றால், தபால் ஓட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டு  ஓட்டுசாவடிக்கு சென்று  ஓட்டு போட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். தற்போது நாட்டின்  அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலை  எதிர்கொள்ள கடந்த ஏப்ரல் மாதத்தில் பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம்.

வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய உள்ளனர். வரும் திங்கள் முதல் ஏற்கனவே பணியிலிருந்த அதே 12ஆயிரம் பணியினை தொடங்க உள்ளனர். காய்ச்சல் முகாம்களுக்கும் தொடங்கப்பட இருப்பதாக கூறிய அவர், கோயம்பேடு மார்க்கெட் பொறுத்தவரை அங்கு தனியாக குழு அமைக்கப்பட்டு அங்குள்ள 10 ஆயிரம் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என்றார். சென்னையில் இதுவரை  5.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. இது போன்ற அலை வரும் என்று நமக்கு தெரியாது. இது உலகம் முழுவதும் வந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் யாரும் தாமத படுத்தாமல் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 

 

click me!