சூடுபிடிக்கத் தொடங்கும் தேர்தல் களம்... டிடிவி தினகரனுக்கு மீண்டும் குக்கர் சின்னம்..!

By Asianet TamilFirst Published Dec 14, 2020, 9:52 PM IST
Highlights

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்குரிய சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
 

 

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டது. வரும் மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் பிரசாரங்களை இப்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.


இதன்படி  தமிழகம், புதுச்சேரியில் அமமுகவுக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அந்தச் சின்னம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினி இன்னும் கட்சி தொடங்காத நிலையில், அதற்கான பணிகளில் ஈடுபட்ட பிறகு பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!