நவ. 19-ல் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 05:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நவ. 19-ல் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொது தேர்தல் நடைபெற்றது. அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரை அடுத்து, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தவிட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. 

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக் குறைவால் காலமானார். இதனை அடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் தேர்தல் நடத்தபெறும் என கூறப்பட்டது. 

இந்த நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் இம்மாதம 26 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 2 ஆம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் என்றும், நவ. 19 ஆம் தேதி தேர்தலுக்குப் பிறகு 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியிலும் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!