ஜெயலலிதா உத்தரவுப்படி அதிமுக 45-வது ஆண்டு விழா கொண்டாட்டம்...

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 03:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஜெயலலிதா உத்தரவுப்படி அதிமுக 45-வது ஆண்டு விழா கொண்டாட்டம்...

சுருக்கம்

அஇஅதிமுகவின் 45-வது ஆண்டு தொடக்க விழா, கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அது குறித்த அறிக்கையை, அதிமுக பொது செயலாளரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அஇஅதிமுகவின் 45-வது ஆண்டு தொடக்க விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது, அதிமுக அலுவலகத்தில் உள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு, அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்தார். பின்னர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து மதுசூதனன், தொடக்க நாள் மலரை வெளியிட்டார். 

தொடக்க நாள் மலர் முதல் பிரதியை நாமக்கல் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அன்பழகன் பெற்றுக் கொண்டார். 45-வது ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சியின்போது, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா பேரவை, அண்ணா தொழிற்சங்கம், இளம் பெண்கள் பாசறை உட்பட பல்வேறு அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!