ஆபீஸர்ஜி! ஹம் ஆதே ஹைம்: தேர்தல் கமிஷனை தெறிக்க வைக்கும் அ.தி.மு.க...

First Published Sep 15, 2017, 1:59 PM IST
Highlights
Election commition suffered from ADMK Teams


தேசத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே தேர்தல் கமிஷனுக்கு வேலை வரும்! மற்ற நேரங்கள்ள அந்த அபீஸர்ஸ் ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு, கேண்டீன்ல ஆஜராகிடுவாங்க!_ என்று கிண்டலாக பேசப்பட்டு வந்த நிலையில் தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு ஓவர் டைம் டூட்டி கொடுத்து பெண்டு கழட்டி வரும் ஒரே கட்சி நம்ம அ.தி.மு.க.தான். 

கட்சியின் சின்னமும், பெயரும் எனக்கே சொந்தம் என்று பழனி அணியும் பன்னீர் அணியும் தனித்தனியாக தேர்தல் கமிஷனில் பஞ்சாயத்துக்கு போனார்கள். ‘வெறும் கையோட வந்தா எப்புடி? ஆதரவாளர்களின் கையொப்பமிட்ட அபிடவிட் தாக்கல் பண்ணுங்க’ என்று லேசுபாசாய் சொல்லி அனுப்பியது தேர்தல் கமிஷன். 

அவ்வளவுதான்! டெல்லியிலிருந்து கையெழுத்து வேட்டையை துவக்கியது இரு அணியும். சென்னைக்கு ஃபிளைட் ஏறியபோது கூட பைலட், ஏர்ஹோஸ்டஸ் வரைக்கும் ‘யக்கா ஒரேயொரு கையெழுத்து போட்டுட்டு போயேன்!’ என்று கேட்காததுதான் குறை. இப்படி இரண்டு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய பிரமாண பத்திரங்களை லாரிகளில் ஏற்றி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இறக்கினர். ஒரு கட்டத்தில் அங்கே உள்ள அலமாரியில் வைக்கிறதுக்கு இடமில்லாமல் வரவேற்பறையிலும் கூட கட்டுக்களை போட்டு வைத்தனர். ’இவ்வளவு பத்திரங்களா?’ என்று தே.க. ஊழியர்கள் கேட்டபோது ’வெயிட் கரோஜி! காடி மேம் எக்ஸ்ட்ரா அபிடவிட்ஸ் ஆத்தா ஹை’ என்று தகரடப்பா ஹிந்தியில் சொல்லி அவர்களை தெறிக்கவிட்டார்கள். 

இலையும், பெயரும் பழனிக்கா அல்லது பன்னீருக்கா? என்று தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுக்க மண்டையை பிய்த்துக் கொண்டது. இந்நிலையில்தான் நெஞ்சம் இனித்து, கண்கள் கசிந்து இரண்டு அணியும் ஒட்டிக் கொண்டன. இந்த இணைப்பினால் பன்னீரின் கரங்களை பிடித்து பழனியின் கையில் ஒப்படைத்து உருகிய நம்ம கவர்னர் வித்யாசாகரை விட அதிகம் சந்தோஷப்பட்டது தேர்தல் கமிஷன் தான். காரணம், இனி இலைய கொடு, பெயரை கொடுன்னு ரெண்டு பேரும் வாசல்ல வந்து நின்னு ரவுசு கொட்ட மாட்டாங்கன்னுதான். 

ஆனால் தேர்தல் கமிஷனின் மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. இணைந்த இரண்டு அணிகளுக்கும் எதிராக பொளேர் அரசியலை செய்து கொண்டிருக்கும் தினகரன் அணி இப்போது தேர்தல் கமிஷனின் கதவுகளை தட்ட துவங்கியிருக்கிறது. 

நேற்று காலையில் கூட டி.டி.வி. அணியின் எம்.பி.க்களான செங்குட்டுவன், உதயகுமார், வசந்தி முருகேசன், கோகுல கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகியோர் பல்க்காக அங்கே போய் நின்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்திருக்கின்றனர். 

அப்போது “பழனிசாமியும், பன்னீர் செல்வமும் கூடிய கூட்டத்தை பொதுக்குழுவாக தேர்தல் கமிஷன் கருதக்கூடாது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கக்கூடாது. இது தொடர்பாக எங்களது கருத்துக்களை கேட்காமல் எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ள கூடாது.” என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். 

கூடவே சின்னம் மற்றும் பெயரை தங்கள் அணிக்கு ஒதுக்கும்படி  கோரி அந்த பணிகளிலும் அதிக ஆவண அழுத்தங்களை காட்டத் துவங்கியிருக்கிறார்கள். 

’அப்பாடா நிம்மதிடா!’ என்று உட்கார்ந்த தேர்தல் கமிஷனுக்கு தினா அணியின் மூலம் அடுத்த குடைச்சல் துவங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முதல்வர்களின் சார்பாக யார் தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்றாலும் உடனே அதை ஸ்மெல் செய்துவிடும் தினா அணி உடனே போனை போட்டு ‘ஆபீஸர் ஜி ஹம் ஆதே ஹைம்!’ என்று சொல்லி அங்கே ஆஜராகி கட்டையை போடுகிறார்களாம். இவர் 
தமிழன்டா!

click me!