
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இதுவரை ரூ. 3 கோடி வரை செலவாகியுள்ளது எனவும் வழக்கமாக தேர்தலுக்கு ரூ. 75 லட்சம் மட்டுமே செலவாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அதிக செலவாகியதற்கு காரணம் கண்காணிப்பு கேமரா பொருத்தம் மற்றும் துணை ராணுவப்படை அமைத்ததே என தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும் திமுக சார்பில் மருதுகணேஷும் சுயேட்சையாக டிடிவியும் களமிறங்குகின்றனர்.
இந்த மூன்று பேருக்கும்தான் தற்போது பலத்த போட்டி நடைபெற்று வருகின்றது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆர்.கே.நகருக்கு பேர் போன பணப்பட்டுவாடா தலைவிரித்து ஆடுகிறது. ஒவ்வொரு ஓட்டிற்கும் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக செய்திகள் வெளிவருகிறது.
இதைதொடர்ந்து மூன்று தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்று குழம்பி வருகின்றது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் இதுவரை எவ்வளவு செலவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இதுவரை ரூ. 3 கோடி வரை செலவாகியுள்ளது எனவும் வழக்கமாக தேர்தலுக்கு ரூ. 75 லட்சம் மட்டுமே செலவாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அதிக செலவாகியதற்கு காரணம் கண்காணிப்பு கேமரா பொருத்தம் மற்றும் துணை ராணுவப்படை அமைத்ததே என தெரிவித்துள்ளது.