எகிப்து வெங்காயம் காரம் தூக்கலாக இருக்கும்... இதயத்துக்கு நல்லது...!! அமைச்சரின் அடுத்த வெங்காய கண்டுபிடிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 12, 2019, 1:23 PM IST
Highlights

 எகிப்திலிருந்து வரும்  வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்,  இது இதயத்திற்கு மிகவும் நல்லது எனவும் அமைச்சர்  செல்லூர் ராஜூ அப்போது தெரிவித்தார். 

வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வர அரசு அனைத்து நட்வடிக்கை எடுத்துவருகிறது என்றும் விலை அதிகரிக்கும் பட்சத்தில் நகரும் கடைகள் மூலம் வெங்காயம் விற்க படும் என  கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுர்ராஜு தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர்,  எகிப்து வெங்காயம் தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு உள்ளது. ஒரிருநாட்களில் தமிழகத்திற்கு  வந்துவிடுமென எதிர்பார்க்கிறோம் என்றார். 

அது அடக்க விலையில் விற்க படுமென  கூறினார்.  கடந்த ஒருமாத த்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம்  கிலோ நாற்பது ரூபாய்க்கு  விற்பனை செய்தோம் என்றும் மேலும் வெங்காய வரத்து வந்ததும்  குறைவான விலையில் விற்பனை செய்வோம் என்றார். அத்துடன்  எகிப்திலிருந்து வரும்  வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்,  இது இதயத்திற்கு மிகவும் நல்லது எனவும் அமைச்சர்  செல்லூர் ராஜூ அப்போது தெரிவித்தார். 

வெங்காயம் விலை குறித்து  எதிரகட்சி தலைவரின்  விமர்சனம் முற்றிலும் தவறானது . அரசு நிர்வாகம் முடுக்கிவிடபட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது  ,இதே திமுக ஆட்சி காலத்தில்  விலை ஏறிய போது அவர்கள் என்ன செய்தார்கள்.?   எந்த பொருட்கள் விலையேறினாலும் அந்த தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காயத்தை  ரேஷன் கடைகளில் விற்கும் நடவடிக்கை தற்போது  அரசு எடுத்துவருகிறது .  வருங்காலத்தில் வெங்காயத்தை பாதுகாக்க கிடங்குகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

click me!