பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகியதற்கு இப்படியொரு காரணமா..? சலிப்பாய் சலிக்கும் உ.பி.க்கள்..!

By vinoth kumarFirst Published Dec 12, 2019, 11:51 AM IST
Highlights

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த நிலையில் அக்கட்சியில் இருந்தும் பழ.கருப்பையா விலகியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்  கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக நடத்தப்படும் விதம் அதன் மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து விடைபெற்றேன் என்று பழ.கருப்பையா கூறினார்.

கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக நடத்தப்படும் விதம் அதன் மீது தனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது என்பதால் திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ.கருப்பையா. இவர் துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்று பேசியபோது அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், அமைச்சர்கள் கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் எனக் கூறியிருந்தது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ பழ.கருப்பையாவை நீக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி முன்னிலையில் பழ.கருப்பையா திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த நிலையில் அக்கட்சியில் இருந்தும் பழ.கருப்பையா விலகியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக நடத்தப்படும் விதம் அதன் மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து விடைபெற்றேன் என்று பழ.கருப்பையா கூறினார்.

click me!