எடப்பாடியின் அதிரி, புதிரி ஆட்டம் தொடக்கம் !! திமுக, அமமுக, மதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுகவில் ஐக்கியமாக ரெடி…

By Selvanayagam PFirst Published Dec 31, 2018, 7:52 AM IST
Highlights

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்எல்ஏக்களில்  15 பேர் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் விரைவில் , அதிமுகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமமுகவில் இருந்து திடீரென விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். இதனால் டிடிவி டிதனகரன் அதிர்ச்சி அடைந்தததை விட எடப்பாடி பழனிசாமிதான் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக, அமமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் பணிணை அதிமுக தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக திமுக விலிருந்து, பிரமுகர்கள் சிலரை இழுக்கும் பணிகளை, அதிமுக  மேலிடம் துவக்கி உள்ளது.  மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்எல்ஏக்களில்  தினகரனுடன் மிக நெருக்கமாக உள்ள, இரண்டு பேரை தவிர, 15 பேரை, அதிமுக பக்கம் இழுக்க, பேச்சு நடத்தப்படுகிறது.


இத பேச்சு, வெற்றிகரமாக முடிந்ததும், எடப்பாடியை இவர்கள்  விரைவில் சந்திப்பார்கள் என்றும், அடுத்தமாத இறுதியில், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இணைப்பு விழாவை, பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன், அமமுக  கூடாரத்தை காலியாக்குவதுடன், தி.மு.க., - காங்., உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் உள்ள, பிரமுகர்களையும் இழுக்கும் பணியையும், அதிமுக துவக்கி உள்ளது


கோவை மண்டலத்தில் பொள்ளாச்சி, பொங்கலுார், ஈரோடு, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த, தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள், கோவை மாவட்ட முன்னாள்செயலர் தலைமையில், அ.தி.மு.க.,வில் சேர தயாராக உள்ளனர். 
காங்கிரசில் இருந்து, சேப்பாக்கம், லால்குடி, திருவட்டாறு, பேராவூரணி, ஆண்டிமடம், சேலம் உள்ளிட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளின், முன்னாள், எம்எல்ஏக்களும், அதிமுகவில் இணைய சம்மதித்து, கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே போல் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் தலைமையில், முக்கிய நிர்வாகிகள், அதிமுகவில் இணைய உள்ளனர்.  தினகரனுக்கு ஆதரவு கரம் நீட்டிய, வட மாவட்டங்களைச் சேர்ந்த, இரண்டு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், மீண்டும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். 

புத்தாண்டை யொட்டி இவர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது தலைமையில் பணியாற்ற, முடிவு செய்துள் ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி பல விஷயங்களை சவாலாக ஏற்று அதிரடி ஆட்டங்களை எடப்பாடி செய்து வருகிறார். வரும் ஜனவரி மாதத்துக்குள் அனைத்து இணைப்பு வேலைகளையும் முடித்து ஒரு பலமாக அதிமுகவை உருவாக்குவார் என அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி பொங்க கூறி வருகின்றனர்.

click me!