கொரோனா நெருக்கடியிலும் விவசாயி மகன் என்பதை நிரூபித்த எடப்பாடியார்..!! அதிமுக அதிரடி சரவெடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2020, 3:21 PM IST
Highlights

ஓசூரில் 20.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏற்றுமதி  மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டினார்

ஓசூரில் 20.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏற்றுமதி  மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதகமான பருவநிலையின் காரணமாக சுமார் 3,702 ஹெக்டர் பரப்பளவில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, ஜெர்பரா, கார்னேஷன் ஆகிய மலர்கள் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 39. 353 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள் அண்டை மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சர்வதேச மலர் ஏல முகமொன்று ரூபாய் 20 கோடியே 20 லட்சம் செலவில் ஓசூரில் அமைக்கப்படும் என்றும், அது மலர் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்  தருவதுடன், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அன்னியச் செலாவணியை அதிகரிக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20.20 கோடி மதிப்பில், ஓசூர் பன்னாட்டு மலர் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.  ஓசூர் பன்னாட்டு மலர் மையம் அடிக்கல் நாட்டுவிழா,  மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி வந்தடைந்தார். அவரை வரவேற்கும் விதமாக  ஏராளமான அதிமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் பதாகைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி வழிநெடுகிலும் காத்திருந்து வரவேற்றனர். இன்று காலை கிருஷ்ணகிரி நகருக்கு வந்த முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் ஓசூரில்  20.20 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மலர் ஏற்றுமதி  மையத்திற்கு அங்கிருந்தபடியே காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன்,அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு அறிவுரைகளையும் வழக்கினார். அப்போது,  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அந்த கூட்டத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் முகக்கவசம் அணிந்து பேதிய சமூக  இடைவெளிகளுடன் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வரின் வருகையை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள்,  குறிப்பாக ஓசூர், ஊத்தங்கரை தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள்  முதலமைச்சரைக் காண  கிருஷ்ணகிரியில் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!