அவர் சொன்னதில் என்ன தப்பிருக்கு..? ஓ.பி.எஸ் மகனுக்காக வரிந்து கட்டும் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Nov 12, 2019, 12:47 PM IST
Highlights

தமிழக மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் எனச் சொல்லலாம்.  அவர் நாடு விட்டு நாடு செல்லும்போது இந்தியாவில் இருந்து வருகிறேன் எனச் சொல்வது தானே சரியாக இருக்கும். 
 

மோடியின் மண்ணான இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் என்று ஓ.பி.ரவீந்திரநாத் அமெரிக்காவில் பேசியதில் தவறு இல்லை  என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் சிகாகோ விழாவில் பேசிய தேனி தொகுதி மக்களவை உறுப்பினரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் பேசுகையில், நான் இந்தியாவில் இருந்து மோடி மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் எனப் பேசினார். 

இதுகுறித்து முதலவர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘மோடி மண்ணில் இருந்து வந்திருப்பதாக ஓ.பி.ரவீந்திரநாத் கூறியிருக்கிறாரே... ஜெயலலிதாவை பற்றி அவர் கூறவில்லையே... தமிழக மண்ணில் இருந்து வந்திருப்பதாக கூறவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர் அப்படி பேசியதில் என்ன தவறு இருக்கிறது. யாராவது அமெரிக்கர்கள் இங்கே வந்தால், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறேன் என்று தானே சொல்ல முடியும். இந்தியாவுக்குள் எங்காவது அவர் சென்றிருந்தால், தமிழக மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் எனச் சொல்லலாம்.  அவர் நாடு விட்டு நாடு செல்லும்போது இந்தியாவில் இருந்து வருகிறேன் எனச் சொல்வது தானே சரியாக இருக்கும். 

மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பயணம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் மோடி மண்ணில் இருந்து வருவதாக அவர் சொல்லி இருக்கிறார். இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டு இருப்பது மோடி தானே. அவர் தானே பிரதமர். ஆகையால் ரவீந்திரநாத் அப்படி சொன்னதில் தவறில்லை’எனத் தெரிவித்துள்ளார். 

click me!