அமெரிக்காவிலும் மோடிக்கு ஐஸ் வைத்த ஓ.பி.ரவீந்திரநாத்... அடியோடு மாறிப்போன ஓ.பி.எஸ்..!

Published : Nov 12, 2019, 12:19 PM ISTUpdated : Nov 12, 2019, 12:20 PM IST
அமெரிக்காவிலும் மோடிக்கு ஐஸ் வைத்த ஓ.பி.ரவீந்திரநாத்... அடியோடு மாறிப்போன ஓ.பி.எஸ்..!

சுருக்கம்

நான் மோடியின் மண்ணிலிருந்து வருகிறேன். உலகில் மிகச்சிறந்த தலைவர். நமது பிரதர் மோடி மிகச்சிறந்த அறிவாளி, வலிலை மிக்கவர்

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத்தும் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிகாகோ நகரிலுள்ள இந்தியத் துணைத் தூதர் சுதாகர் தலேலா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி டெவிஸ் உட்பட பலரும் கலந்து கொண்ட இவ்விழாவில், தேனி எம்.பி-யும் ஓ.பி.எஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் பேசுகையில், "தமிழ்நாட்டுல இருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பினப்போ, இன்னொரு ஊருக்கு போறோமே எப்படி இருக்குமோனு ஒரு சின்ன பதற்றம் இருந்தது. ஆனா, நம்ம ஊருல உறவுக்காரங்க மத்தியில இருக்குற உணர்வைத்தான் இங்க உணர்கிறேன். சொந்த ஊர்ல, சொந்த வீட்டுல இருக்குற மாதிரிதான் இருக்கு என்று உருகினார்.

``நான் மோடியின் மண்ணிலிருந்து வருகிறேன். உலகில் மிகச்சிறந்த தலைவர். நமது பிரதர் மோடி மிகச்சிறந்த அறிவாளி, வலிலை மிக்கவர்” என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மைனஸ் 2 டிகிரி குளிரடிப்பதால், தடிமனான பேன்ட், ஷர்ட், கோட் போட்டுக்கொள்ள அங்குள்ள தமிழர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதெல்லாம் வேண்டாம். எனக்கு வேட்டி சட்டை கட்டுவதை போல வசதி வராது என மறுத்து ஓவர் கோட் மட்டும் போட்டுக் கொண்டார்  ஓ.பி.எஸ். சிகாகோ தொழிலதிபர்களைச் சந்தித்தபோது மட்டும் கோட் சூட் போட்டுக்கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!