
தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், தற்போது இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு சென்றுள்ளது. தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த தினா கேங் கடும் அதிர்ச்சியைடந்தது. இத்தனயடுத்து, சபாவுக்கு எதிரான தனது மனுவை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கப் போகிறேன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் எனவும் தங்க தமிழ்செல்வன் அறிவித்தார்.
இதனையடுத்து, தினகரன் தரப்பில் இருக்கும் MLA க்கள் ஏன் ராஜினமா, வழக்கு வாபஸ் என்ற எந்த அறிவிப்பும் இல்லை என யோசித்தது ஆளும் தரப்பு. உள்ளிட்ட 18 MLA க்களையும் எடப்பாடி பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து எடப்பாடி தங்கம் உட்பட மற்ற எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வந்தால் மகிழ்ச்சிதான் என நேரிடையாகவே அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து தான் தங்க தமிழ்செல்வனின் டீல் பேசினார்களாம் ஆளும் தரப்பு ஆனால் டீல் ஒத்துவராததால், உடனே வெற்றிவேலுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர் .
அப்போது பேசிய ஆண்டிபட்டி தங்கம், “நாங்கள் அனைவரும் தினகரன் பக்கமே ஒற்றுமையுடன் இருக்கிறோம். வழக்கை வாபஸ் பெறுவது எனது தனிப்பட்ட விருப்பம். அதனால், கருத்து வேறுபாடு என கூறுவதில் அர்த்தமில்லை. எங்களில் ஒருவரையாவது முதல்வர் பழனிச்சாமி தரப்பு இழுத்துவிட்டால், நாங்கள் அனைவருமே அங்கு சென்று விடுகிறோம். ஆனால், அவர்களால் எங்களில் ஒருவரையாவது இழுக்க முடியுமா?” என சவாலாக பேசினார்.
இதனால் கடுப்பான எடப்பாடி தரப்பு, ஆபரேஷனில் குதித்ததாம், முதலில் எம்.எல்.ஏக்களில் 6 பேரை குறிவைத்து அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் சமாதானப் படலத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். தற்போது ஆட்சிக்கு தேவை 7 ஆக, எடப்பாடி டார்கெட் 7. இனி நம்மக்கு யோசிக்க நேரமில்லை எப்படியாவது தீர்ப்புக்கு முன் 7 பேரை வளைத்து விட வேண்டும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்களுக்கு வேண்டியதை செய்துவிடுவோம் என அமைச்சர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.