எம்எல்ஏக்களுடன் ஆலோசனையை தொடங்கினார் எடப்பாடி!! - கத்திமுனை ஆட்சி கவிழுமா? நிலைக்குமா?

Asianet News Tamil  
Published : Jun 06, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
எம்எல்ஏக்களுடன் ஆலோசனையை தொடங்கினார் எடப்பாடி!! - கத்திமுனை ஆட்சி கவிழுமா? நிலைக்குமா?

சுருக்கம்

edappadi started meeting with mla

அதிமுக எம்.எல்.ஏக்கள் 29 பேர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், 9 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி ஆலோசனையை தொடங்கியுள்ளார்.

ஒ.பி.எஸ்சிடம் இருந்து முதலமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட பிறகு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலாமைச்சராக பதவியேற்றார்.

ஆனால் எடப்பாடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் தலைமையில் தனி அணி உருவாகியது.

இதையடுத்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டு ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டது.

ஆனால் சசிகலா குடும்பத்தை பிரித்து வைத்தால் தான் கூட்டணி என ஒ.பி.எஸ் அணியினர் ஸ்ட்ரிக்ட்டாக கூறி விட்டனர். தினகரனை ஒத்திவைக்கவும் அமைச்சரவை தயார் நிலையில் இருந்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி அரசு எம்.எல்.ஏக்களை கண்டுகொள்ளததால் பெரும்பாலானோர் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய  தினகரனை எடப்பாடி தரப்பு கட்சியில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இதுவரை 29  எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட எம்.எல்.ஏக்களை மாலை 3 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், வேலூர், கடலூர் மாவாட்ட எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையை தொடங்கினார் எடப்பாடி.

தற்போது திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை தலைமைசெயலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழுமா நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!
Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!