
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நிதி ஆயாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
41 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே நிதி ஆயாக் கூட்டத்தில் கலந்து டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அப்போது நிதி ஆயாக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.
அதன்படி நிதி ஆயாக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என வலியுர்த்தியுள்ளார்.
மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீட்டில் ஒரே அளவீடு என்ற கொள்கையை தவிர்க்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வசமுள்ள 133 மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி வலியுத்தியுள்ளார்.