
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதைதொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்னர், கடந்த திங்கட்கிழமை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.
இதைதொடர்ந்து இன்று தொடங்கிய கூட்டத்தில் திமுக உறுப்பினர் ராஜேந்திரன், கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், டெல்லி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என கேட்டார்.
இதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தலைநகர் டெல்லியிலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றார்.
மேலும், மாணவர் முத்து கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய காவல், கல்வி துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
அதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பதில் அளித்து பேசினார். அப்போது, தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு குறித்த நடவடிக்கையை தமிழக அரசு செய்யும். மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றார்.